அனிதா சம்பத்தின் தந்தையை பார்த்துள்ளீர்களா ? இதுவரை வெளிவராதா குடும்ப புகைப்படம் இதோ.

0
3225
anitha
- Advertisement -

கடந்த அக்டோபர் 4ஆம் தேதி துவங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் முதல் நாளில் வழக்கம் போல கொஞ்சம் போராக சென்று கொண்டிருந்தது. ஆனால், கடந்த இரண்டு மூன்று தினங்களாக இந்த நிகழ்ச்சியில் கொஞ்சம் லேசாக சூடு பிடிக்கத் துவங்கியது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமில்லாத மற்றும் பரிட்சயமான பல போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் செய்தி வாசிப்பாளராக இருந்த சினிமாவில் ஒரு சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் தோன்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்த அனிதா சம்பத்தும் கலந்து கொண்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

கடந்த திங்கள் கிழமை பிக் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு பிக் பாஸ், டாஸ்க் ஒன்றைகொடுத்திருந்தார். அதில் பிக்பாஸ் வீட்டில் இந்த ஒரு நாளில் தங்களை மிகவும் கவர்ந்த போட்டியாளர்களுக்கு ஹார்ட் சிம்புலையும், மேலும் தங்கள் மனதை புண்படுத்திய அல்லது காயப்படுத்திய போட்டியாளர்களுக்கு ஹார்ட் பிரேக் சிம்புலயும் குத்துமாறு கூறியிருந்தார். இதில் அதிக ஹார்ட் பிரேக்கை வாங்கியிருந்தார் சிவானி. இப்படி ஒரு நிலையில் இந்த டாஸ்கின் போது அனிதா சம்பத், வேல்முருகனுக்கும் நிஷாவிற்கும் ஹார்ட்டை குத்தினார்.

- Advertisement -

நிஷாவிற்கு ஹார்ட் குத்தியதர்கான காரணத்தை கூறும் போது கொஞ்சம் ஏமோஷனாகி அனிதா சம்பத் பேசுகையில் நிஷா அக்காவை பார்க்கும் போது என்னுடைய அம்மாவை பார்ப்பது போல இருக்கிறது. என் அம்மா கொஞ்சம் கருப்பாக இருப்பார்கள். அதனால் என்னுடைய பள்ளி, கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சிகளைக் கூட வர யோசிப்பார்கள். அதேபோல நான் இந்த டிரஸ் போடமாட்டேன் நகை போட மாட்டேன், நகை போட்டால் நான் மேலும் கருப்பாகத் தெரிவேன். நான் கல்லூரிக்கு வந்தால் என்னை கேலி செய்வார்கள் என்று ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

ஆனால், நிஷா அக்கா அனைத்தையுமே பாசிட்டிவாக எடுத்துக் கொள்கிறார். எனவே என்னுடைய அம்மா, அக்காவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். கருப்பு நிறத்தை எண்ணி எங்கேயும் தன்னை தாழ்வாக நினைக்காமல் அக்கா இருக்கிறார். அதனால் நிஷா அக்காவிடமிருந்து என்னுடைய அம்மா கற்றுக் கொள்ள நினைக்கிறேன் என்று உருக்கமுடன் கூறியிருந்தார் அனிதா சம்பத்.அனிதா சம்பத்தின் குடும்ப புகைப்படம் இதோ.

-விளம்பரம்-
Advertisement