சூ*** வைப்பாங்க, போடா ம*** – படு கொச்சையாக பேசிய அனிதா, வைரலாகும் வீடியோ – என்னம்மா இதெல்லாம்.

0
836
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. இந்த நிகழ்ச்சி முதன் முதலாக இந்தி மொழியில் தான் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் ஐந்து வருடங்களாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், சமீபத்தில் தான் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிவடைந்தது. இதில் ராஜு முதல் இடத்தையும், 2-ஆம் இடத்தை பிரியங்காவும் பிடித்து இருந்தார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து ரசிகர்கள் சோகத்தில் இருக்கும் நிலையில் தான் பிக்பாஸ் அல்டிமேட் என்ற புது வித்தியாசமான கதைக்களத்துடன் விஜய் டிவி அறிமுகப்படுத்தி இருக்கிறது.

-விளம்பரம்-

முதல் நாளே 14 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை சுரேஷ் சக்ரவர்த்தி, சுஜா வருணி, ஷாரிக், அபிநய் வெளியேறிய நிலையில் வனிதா தாமாக வெளியேறினார். இதை தொடர்ந்து கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே வெளியேறிய சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் Kpy சதிஷ் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்தனர். அதே போல விக்ரம் பட ஷூட்டிங்கால் கமல் வெளியேறியதை தொடர்ந்து தற்போது சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

- Advertisement -

டேமேஜ் ஆகும் அனிதா பெயர் ;

மேலும், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே போட்டியாளர்களுக்குள் வன்மம் கலவரம் தொடங்கி பயங்கரமாக ஒருவரை ஒருவர் தாக்கி விளையாடி வருகிறார்கள். இந்த சீஸனின் சீசன் 4ல் இருந்து பாலாஜி, அனிதா, ரம்யா பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் அனிதாவின் பெயர் தான் தொடர்ந்து டேமேஜ் ஆகி வருகிறது. 4ஆம் சீசனில் பெண்கள் சுதந்திரத்தை பற்றி எல்லாம் பேசி கைதட்டல் வாங்கினார் அனிதா.

முற்றிலும் மாறிய அனிதா :

அதே பாணியை இந்த சீசனிலும் கடைபிடித்து வந்தாலும் அது அவருக்கே வினையாக முடிந்துவிட்டது. தான் விளையாடுவதை விட்டுவிட்டு மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று தான் மிகவும் யோசித்து கொண்டு இருக்கிறார். அதே போல 4ஆம் சீசனில் இவர் சுமங்கலி பஞ்சாயத்து குறித்து பேசி காமலிடமே கைதட்டலை வாங்கினார். ஆனால், இந்த சீசனில் இருக்கும் அனிதாவே வேறு.

-விளம்பரம்-

கொச்சையாக பேசிய அனிதா :

இந்த சீசனில் அனிதா பல முறை டபுள் மீனிங்கில் பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கூட பிக் பாஸின் குழந்தை என் வயிற்றில் வளருகிறது என்று பேசி பலரை முகம் சுளிக்க வைத்தார். அனிதாவின் நடவடிக்கைகளை பார்த்த ரசிகர்கள் பலர் இவரா இப்படி எல்லாம் பேசுகிறார்கள் என்று அதிர்ச்சியடைந்தனர். இப்படி ஒரு நிலையில் இவர் கொச்சையாக பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

வைரலாகும் வீடியோ :

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் ஒளிபரப்பான எபிசோட் ஒன்றில் நிரூப் மற்றும் அனிதா இருவரும் லிவ்விங் ஏரியாவில் வேலை செய்துகொண்டு இருந்தனர். அப்போது நிரூப், அந்த ரெண்டு பாட்டில எடுத்து அங்க வை என்று அனிதாவிடம் நிரூப் சொல்ல அதற்கு அனிதா சூ*** வைப்பாங்க நான் ஏன் வைக்கணும், அது யார் பாட்டிலோ அவங்கல வைக்க சொல்லு போடா என்று படு கொச்சையாக பேசி இருக்கிறார்.

Advertisement