மின்னல் வேகத்தில் டாஸ்க்கை வென்று கேப்டனான தினேஷ், பிக் பாஸ் கொடுத்த ட்விஸ்ட். பூர்ணிமா மாயாவிற்கு தினேஷ் கொடுத்த வேலை.

0
431
- Advertisement -

இந்த வாரம் பிக் பாஸ் ஒரே வீடு தான் என்ற தகவல் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 42 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

முதல் நாளில் இருந்தே நிகழ்ச்சி அனல் பறந்து கொண்டு இருக்கிறது. அதேபோல் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். பின் யாரும் எதிர்பாரா வகையில் பிரதீப்புக்கு Red Card கொடுத்து வெளியேற்றப்பட்டார். காரணம், பிரதீப்பால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வீட்டில் இருந்த பெரும்பாலான பெண்கள் கமலிடம் முறையிட்டததால் அவரை வீட்டில் இருந்து வெளியேற்றினார் கமல். ஆனால், இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

- Advertisement -

மேலும், கடந்த வாரம் முழுவதும் பிக் பாஸ், ஸ்மால் பாஸ் வீடு இருவருக்குமே கடுமையான கலவரம் நடந்தது. மாயா, ஜோவிகா, பூர்ணிமா, ஐசு ஆகியோர் அர்ச்சனா, விசித்திராவை தாக்கி மோசமாக பேசியிருந்தார்கள். வழக்கம்போல் வார இறுதியில் கமல் எல்லோரையும் வெளுத்து வாங்கி பேசி இருந்தார். பிறகு தீபாவளி உற்சாகமாக கொண்டாடியிருந்தார்கள். அதற்குப்பின் நேற்றைய எபிசோட்டில் அனைவரும் எதிர்பார்த்தது போல் ஐசு வெளியேறினார்.

மேலும், நேற்று எபிசோடில் கேப்டனுக்கான டாஸ்க் நடைபெற்றது. அதில் ஜோவிகா, ஐசு, தினேஷ் பங்கு பெற்றிருந்தார்கள். இவர்களுக்கு நடுவராக மாயா இருந்தார். ஒரு வளையத்திற்குள் பாலை சுற்றி நடக்க வேண்டும் என்று பிக் பாஸ் சொன்னார். மணி அடித்தவுடன் தினேஷ் சர சர என்று டாஸ்கை சில நிமிடத்திலேயே முடித்து விட்டார். இது பலருக்குமே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. மாயவும் அவ்வளவுதானா? அவ்வளவு தானா? என்று ஷாக்கில் கேட்டிருந்தார்.

-விளம்பரம்-

இன்னொரு பக்கம், ஜோவிகா, ஐசு என்ன நடந்தது என்று புரியாமல் குழப்பத்தில் நின்றிருந்தார்கள். இறுதியில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்கு கேப்டனாக தினேஷ் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் இந்த வாரம் பிக் பாஸ்- ஸ்மால் பாஸ் என்ற பிரிவு கிடையாது. இந்த வாரம் எல்லாம் ஒரே பிக் பாஸ் வீடுதான் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார். இது போட்டியாளர்கள் மத்தியில் சந்தோஷத்தை அளித்திருக்கிறது. ஆனால், சில பேருக்கு வருத்தம் என்று சொல்லலாம்.

பின் வீட்டில் வேலை செய்வதற்கு அணிகளை கேப்டன் ஆன தினேஷ் தேர்வு செய்திருந்தார். அந்த வகையில்

குக்கிங் டீம்:

ஜோவிகா
பிராவோ
விஷ்ணு
நிக்சன்

ஹவுஸ் கிளீனிங்

விக்ரம்
அக்ஷயா
கானா பாலா
விசித்ரா
ரவீனா

https://twitter.com/nkoptimist/status/1723953993498443863

பாத்ரூம் கிளீனிங்

கூல் சுரேஷ்
மணி சந்திரா
அர்ச்சனா

வெசல் வாஷிங் டீம்

மாயா
பூர்ணிமா
தற்போது இந்த பட்டியல் தான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Advertisement