ப்பா, நிஷா பொண்ணா இது, நெடு நெடுனு எப்படி வளந்துட்டு இருக்காங்க பாருங்க.

0
2927
nisha
- Advertisement -

சின்னத்திரையில் பெண் காமெடியன்கள் இருப்பது அரிதான ஒரு விஷயம். அப்படி சின்னத்திரையில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் அறந்தாங்கி நிஷா. காமெடி என்றால் எங்கள் ஏரியா என்று ஆண்கள் சொல்லிக்கொள்ளும் நிலையில் பெண்களாலும் காமெடி செய்ய முடியும் என்று நிரூபித்து காட்டியவர் அறந்தாங்கி நிஷா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பல்வேறு ஆண் போட்டியாளர்கள் மத்தியில் கலந்துகொண்டு பிரபலமானார்.

-விளம்பரம்-

காமெடி செய்வது பெண்களாலும் முடியும் என்று மக்கள் மத்தியில் தன்னுடைய நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி அவர்கள் எண்ணம் தவறானது என்று நிரூபித்தவர் அறந்தாங்கி நிஷா. தன்னுடைய நகைச்சுவை பேச்சாற்றலால் பல மேடைகளில் கலக்கிய அறந்தாங்கி நிஷா தற்போது சினிமா துறையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இதையும் பாருங்க : இளம் வயதில் படு கிளாமர் உடையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ள நீலிமா நடத்திய – வேற லெவல் Throwback போட்டோஸ்.

- Advertisement -

அறந்தாங்கி நிஷா கடந்த சில வருடங்களுக்கு முன் ரியாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள் குக்கு வித் கோமாளி சீசன் 1 ல் தொகுப்பாளினியாக இருந்த இவர் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்த போது தான் இவருக்கு இரண்டாம் குழந்தை பிறந்தது. மேலும் , தனது அம்மாவே தனக்கு மகளாக பிறந்துவிட்டார் என்று உருக்கமுடன் தெரிவித்திருந்தார் நிஷா. இந்த நிலையில் நிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகளுடன் நடத்திய போட்டோ ஷூட் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் நிஷாவின் மகள் நெடு நெடுவென வளந்து இருப்பதை கண்டு ரசிகர்கள் பலரும் வியந்து போய்யுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement