LABOUR மற்றும் SKILL WORK பஞ்சாயத்து, அருண் சொன்னது சரி தான் – அர்ச்சனா வெளியிட்ட வீடியோ

0
307
- Advertisement -

அருணுக்கு ஆதரவாக விஜய் சேதுபதியை தாக்கி பிக் பாஸ் அர்ச்சனா பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி டிவியில் தொடங்கி 11வது வாரம் தொடங்கி 72 நாட்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீடு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள். கடந்த வாரம் தொழிலாளி- முதலாளி டாஸ்க் நடைபெற்று இருந்தது.

- Advertisement -

பிக் பாஸ் 8:

இதில் போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவு வெடித்தது. மேலும், இந்த டாஸ்க்கில் அருண் நடந்து கொண்ட விதத்தை கண்டித்து விஜய் சேதுபதி கோபமாக பல கேள்விகளை எழுப்பியும், விமர்சித்தும் பேசி இருந்தார். இதுகுறித்து இணையத்திலும் ட்ரோல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக அருண் பிரசாத் காதலியும், நடிகையுமான அர்ச்சனா வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், போன வாரத்திற்கு முன் வாரம் 2 எவிக்ஷன் நடந்தது. டக்குனு ஆட்கள் குறைந்தார்கள். அதனால் டீம் பிரிக்கும் போது கிச்சன் டீமில் கம்மியான ஆட்கள் போட்டால் போதும் என்றார் அருண்.

அர்ச்சனா வீடியோ:

காரணம், ஆட்கள் குறைவாக இருப்பதால் சமைக்க கூடிய அளவும் குறைவாக இருக்கும் என்பதை தான் அருண் சொன்னார். அவர் சொன்னதில் லாஜிக் சரியாக இருந்தது. கடந்த வாரம் ஸ்கில் வேலை, லேபர் வேலை டாஸ்க் நடந்தது. வார இறுதியில் அருண் சொல்ல வந்ததை வேற மாதிரி மாத்தி விட்டார்கள். அது ரொம்பவே எனக்கு கஷ்டமாக இருந்தது. அருண், லேபர் வேலை- ஸ்கில் வேலை என்று பிரித்து பேசுவதாக சொல்கிறார்கள். ஆனால், வீட்டில் எல்லோருமே சமம் தான். கேம் விளையாடுவது தான் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை என்பதை தான் அருண் சொல்ல வந்தார்.

-விளம்பரம்-

அருண் செய்தது:

அதை ட்ரிகர் பண்ணி விட்டார்கள். அடுத்த நாள் தீபக், லேபர் வேலை செய்பவர்களுக்கு இந்த அளவு காபியே போதும் என்று பேசி இருந்தார். ஆனால், அதை பெரிதாகவே கண்டு கொள்ளவில்லை. அருண் அப்படி நினைக்கவும், பேசவும் இல்லை. அவர் பேசிய ஒரு விஷயத்தை வேற மாதிரி ஊதி பெரிதாகி விட்டார்கள். விஜய் சேதுபதியுமே அதை தேவையில்லாமல் கேள்வி எழுப்பி பேசியிருந்தார். அவர் எல்லோருமே சமம் தான், எல்லோருக்குமே உரிமை இருக்கிறது என்பதை தான் சொல்ல வந்தார். ஆனால், பயத்தில் அவரால் சொல்ல முடியவில்லை.

விஜய் சேதுபதி செய்தது:

அவருடைய தரப்பு வாதத்தை எடுத்து வைக்க முடியவில்லை. இதை ஏன் இவ்வளவு பெரிசாக ஊதி பெரிதாகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. நிகழ்ச்சி முடிந்த பிறகு கூட மைக்கில் பேசியது, கன்பெக்ஷன் ரூமில் பேசியது என்று டேமேஜ் கண்ட்ரோல் மாதிரியே பண்ணிட்டு இருந்தார்கள். அதற்கு பேசாமலேயே விட்டிருக்கலாம். இதை ஏன் ஒரு 40 நிமிஷம் பேசிட்டு இருந்தாங்க என்றுதான் எனக்கு தெரியவில்லை என்று கூறி இருக்கிறார்.

Advertisement