எப்பா, இந்த அர்ச்சனா வேனவே வேணாம். இவங்கள ஆங்கரா போடுங்க – புலம்பும் ரசிகர்கள். (இவங்களும் ரொம்ப நாளா கேட்டுட்டு தான் இருக்காங்க)

0
2248
archana
- Advertisement -

தொலைக்காட்சிகள் அனைத்தும் சீரியலை தாண்டி பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதில் ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றுவிடுகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சியை விஜய் டிவி நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கப்பட்ட மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை சீசன் 3 விரைவில் துவங்க இருக்கிறது.

-விளம்பரம்-

கணவன், மனைவி இருவரும் சின்னத்திரை நட்சத்திரங்களாக இருந்தால், அவர்களை வைத்து நடத்தப்படும் நிகழ்ச்சி.இது பல சுற்றுகள் கொண்ட போட்டி நிகழ்ச்சி. நட்சத்திர தம்பதிகள் இடையே உள்ள திறமை, ஒற்றுமை, மன உறுதி, பொது அறிவு, ஆகியவற்றை வெளிப்படுத்த பல ரவுண்டுகள் இருக்கும். அதை எல்லாம் தாண்டி இறுதியில் சிறந்த தம்பதியருக்கு டைட்டிலும் வழங்கப்படும்.

- Advertisement -

இதுவரை இரண்டு சீசன் நிறைவடைந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாம் சீசன் விரைவில் துவங்க இருக்கிறது. சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருந்தது. அதில் அர்ச்சனா தொகுப்பாளினியாக இருப்பதை பார்த்த பலரும் அர்ச்சனாவை இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக போட வேண்டாம் என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

This image has an empty alt attribute; its file name is 1-127-1024x534.jpg

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கி வருகிறார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியால் இவரது பெயர் படும் டேமேஜ் ஆனதால் இவரது ஆங்கரிங்க்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு குறைந்துள்ளது. இதனால் மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் 3யில் இவரது ஆங்கரிங் வேண்டாம் என்று பலர் கமன்ட் செய்து வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் மணிமேகலையை தொகுப்பாளினியாக போட வேண்டும் என்று சிபாரிசு செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement