பிரபல பாடகி ரமணியம்மாள் இன்று காலமாகி இருக்கும் சமத்துவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் தொலைக்காட்சிகளில் பல்வேறு விதமான பாடல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகம நிகழ்ச்சியும் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலம் தான். இந்த நிகழ்ச்சி இதுவரை 3 சீசன்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல பாடகர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகளும் கிடைத்து இருக்கிறது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சி மூலம் படு பிரபலமடைந்தவர் ரமணியம்மாள்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ‘ச ரி க ம பா’ சீசனில் பங்கேற்று ராக்ஸ்டார் என்ற செல்லப் பெயரை பெற்றவர் ரமணியம்மாள். ரமணியம்மாள் 43 ஆண்டு காலமாக வீட்டு வேலைகள் செய்து, மிகுந்த அவதிப்பட்டு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்த வேளையில், அவரின் பாடல் பாடும் திறனை அறிந்த சிலர் ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சி நடத்தும் ‘சரிகமப’ நிகழ்ச்சியில் சேர்த்துவிட்டனர்.

Advertisement

இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த போது சன், விஜய் போன்ற தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி போல இருக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ரமணியம்மா பெரும் ஆச்சர்யமான போட்டியாளராக களமிறக்கப்பட்டார். இவரது பாடலை கேட்டு நிகழ்ச்சி நடுவர்கள் கூட வியப்படைந்தனர். சரிகமப நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றில் வர்ஷா முதல் இடத்தை பிடித்து வின்னர் பட்டத்தை வென்றார்.

ஆனால்,ரமணியம்மாளுக்கும் அதிகப்படியான பொதுமக்கள் ஓட்டு போட்டனர். இவருக்குப் பரிசாக ஐந்து லட்சம் ரூபாயும், ஐந்து சென்ட் நிலமும் வழங்கப்படும் என நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது. மேலும், அது சில மாதங்களிலேயே அவருக்கு வழங்பட்டது.ஆனால், இவருக்கு வழங்கபடுவதாக இருந்த 5 சென்ட் நிலம் நிகழ்ச்சி முடிந்து பல மாதங்கள் ஆன நிலையிலும் இவருக்கு வழங்கப்படாமல் இருந்தது.

Advertisement

அதன் பின்னர் இந்த விஷயம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவ பின்னர் ரமணியம்மாளுக்கு ஒரு வழியாக இந்த நிலம் வழங்கப்படது. இதுகுறித்து பேசிய ரமணியம்மாள் எனக்கு கிடைத்த பணத்தை நான் என் 7 பிள்ளைகளுக்கும் பிரித்து கொடுத்துவிட்டேன். நான் சம்பாதிக்கும் பணமே எனக்கு போதும். காரில் என்னை திண்டிவனம் அழைத்து சென்று என் பெயரில் பதர்ப்பதிவை முடித்துள்ளனர் என்று கூறி இருந்தார்.

Advertisement

இந்நிலையில், வயது மூப்பு காரணமாக ரமணியம்மள் இன்று காலமானார், அவருக்கு வயது 69. இவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் சரிகமப நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அர்ச்சனா ‘என் அன்பிற்குரிய ரமணி அம்மாள், நீங்கள் கண்டிப்பாக மிஸ் செய்யப்படுவீர்கள், ஓம் சாந்தி.உங்கள் குரல் என்றும் எங்கள் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டே இருக்கும்’ என்று தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், இன்ஸடாவில் இரங்கல் செய்தி போட்டதோடு மட்டுமல்லாமல் நேரில் சென்று ராமணியம்மாளுக்கு அஞ்சலி செலுத்தி இருக்கிறார் அர்ச்சனா.

Advertisement