தொகுப்பாளினி அர்ச்சனா சொகுசு கார் வாங்கி இருக்கும் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழில் 90 ஸ்களில் தனியார் சேட்டிலைட் சேனல்கள் அறிமுகமான காலத்தில் இருந்து ஆங்கரிங் செய்து வருகிறார் அர்ச்சனா. சன் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வந்தார் அர்ச்சனா. அதன் பின்னர் ஸ்வர்ணமால்யா விட்டுச்சென்ற ‘இளமை புதுமை’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

அந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. மேலும், அர்ச்சனாவின் ஆங்கரிங் ஸ்டைலுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதை தொடர்ந்து தனது தொகுப்பாளினி பணியை செய்து வந்த அர்ச்சனா கடந்த 2004 ஆம் வந்த வினித் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னர் அர்ச்சனா தொலைக்காட்சியில் இருந்து விலகி இருந்தார். நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ச ரி க ம ‘ ரியாலிட்டி ஷோவில் தொகுப்பாளினியாக களமிறங்கினார் அர்ச்சனா.
அர்ச்சனா குறித்த தகவல்:
அதனை தொடர்ந்து அர்ச்சனாவும் அவரது மகள் சாராவும் சேர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் மாம்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. அதே போல சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ படத்திலும் அர்ச்சனா மற்றும் அவரது மகள் சாரா இருவரும் நடித்து இருந்தனர். என்னதான் இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் இருந்தாலும் ஹேட்டர்ஸ்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
View this post on InstagramA post shared by Archana Chandhoke Official (@archanachandhoke)
அர்ச்சனா மகள்:
அதிலும் குறிப்பாக அர்ச்சனா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்த பின்னர் தான் அவருக்கு ஹேட்டர்ஸ்கள் அதிகம் உருவாகினர்கள். தற்போது சாராவும் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பங்கேற்று வருகிறார். அதே போல படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இப்படி தன்னுடைய வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அதேபோல் அர்ச்சனா தற்போது டிவி நிகழ்ச்சிகள், பேட்டிகள், விருது விழாக்கள், பட விழாக்கள் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
அர்ச்சனா வாங்கிய சொகுசு கார்:
மேலும், அம்மா-மகள் இருவரும் சேர்ந்து youtube சேனல் ஒன்று நடத்தி வருகிறார்கள். அதில் இவர்கள் பதிவிடும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் தொகுப்பாளினி அர்ச்சனா அவர்கள் புதிதாக சொகுசு கார் வாங்கி இருக்கும் வீடியோ தான் வெளியாகி இருக்கிறது. அதாவது, அர்ச்சனா தன்னுடைய மகள் மற்றும் ஒட்டுமொத்த குடும்பத்துடன் சேர்ந்து சொகுசு கார் வாங்கப் போய் இருக்கிறார்.

கார் குறித்த தகவல்:
இவர் வாங்கிய கார் Mercedes-Benz GLC ரகம். இதனுடைய விலை சுமார் 75 லட்சம் இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வீடியோ ஒன்றை அர்ச்சனா இன்ஸ்டாவில் பதிவிட்டு, இதற்காக 25 வருடம் கஷ்டப்பட்டு உழைத்தேன் என்று எமோஷனல் ஆக அர்ச்சனா கண்ணீர் விட்டு கதறி அழுது இருக்கிறார். இவருடன் குடும்ப உறுப்பினர்களும் கதறி அழுது இருக்கிறார்கள். தற்போது அர்ச்சனா சொகுசு கார் வாங்கி இருக்கும் புகைப்படம் தான் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.





