அர்ச்சனாவுக்கு எதிராக செயல்படுகிறதா விஜய் டிவி – சனி, மற்றும் ஞாயிற்று கிழமை நடந்த இந்த விஷயத்தை நோட் பண்ணீங்களா?

0
583
- Advertisement -

விஜய் டிவி அர்ச்சனாவிற்கு எதிராக செயல்படுகிறது என்று ரசிகர்கள் வெளியிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழில் அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 77 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

மேலும், இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ. ஜோவிகா, அனன்யா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். பின் கடந்த வாரம் அனைவரும் எதிர்பார்த்த டிக்கெட் டூ பினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் பிக் பாஸ், இரண்டு நபரை தேர்ந்தெடுத்து அவர்கள் போட்டியில் கலந்து கொள்ள கூடாது என்று சொன்னவுடன் எல்லாருமே அர்ச்சனா, விஜய் வர்மாவை தேர்ந்தெடுத்து இருந்தனர்.

- Advertisement -

பிக் பாஸ் 7:

பின் நிகழ்ச்சியில் டான்ஸ் மாரத்தான் டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. இதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுடைய கதாபாத்திரமாகவே மாறி நடனமாடி இருந்தனர். குறிப்பாக விசித்ரா, தினேஷ், அர்ச்சனா ஆகியோர் தங்களுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தார்கள். பின் கடந்த வாரம் தினேஷ், கூல் சுரேஷ், அர்ச்சனா, விஷ்ணு, நிக்சன் ஆகியோர் நாமினேஷனில் இருந்தார்கள். இதில் நிக்சன் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்ட்டது.

கூல் சுரேஷ் வெளியேற்றம்:

கடந்த சில வாரங்களாகவே கூல் சுரேஷ் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறிக்கொண்டே இருந்தார். இதனால் சில தினங்களுக்கு முன்னர் கூட கூல் சுரேஷ் சுவர் ஏறி குதித்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி இருந்ததது. கூல் சுரேஷ் இப்படி செய்ததால் இந்த வாரம் பிக் பாஸ் எவிக்ஷனில் குழப்பம் ஏற்பட்டது. இதன் காரணமாகவே கூல் சுரேஷ் வெளியேறினார்.

-விளம்பரம்-

அர்ச்சனா வீடியோ:

இந்த நிலையில் நேற்று லைவ் எபிசோட் வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில் அர்ச்சனாவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. அது மட்டுமில்லாமல் மக்கள் ஆரவாரமாக கைத்தட்டி இருந்தார்கள். ஆனால், அதை எடிட் செய்து நேற்று எபிசோட்டில் விஜய் டிவி ஒளிபரப்பி இருந்தார்கள். தற்போது இந்த வீடியோ தான் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ரசிகர்கள் விமர்சனம்:

மேலும், இந்த வீடியோவை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பதிவிட்டு, விஜய் டிவி அர்ச்சனாவிற்கு எதிராக செயல்படுகிறதா? புள்ளி கேங்க்கில் இருந்து யாரையாவது ஒருவரை சப்போர்ட் செய்கிறதா? ஏன் இப்படி செய்கிறது? இதற்குப் பின் விளைவு ஏதாவது இருக்கிறதா? என்று எல்லாம் கேட்டு வருகிறார்கள். விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அர்ச்சனா. இவர் இதற்கு முன்பு விஜேவாக பணியாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement