கேபியுடன் பேசுவதை பொருக்க முடியாமல், ரியோ மற்றும் சோம் சேகருக்கு வேதம் ஓதும் அர்ச்சனா – குறும்படம் இதோ.

0
4438
archana
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 61 நாட்களை நிறைவு செய்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா ஆகியோர் வெளியேறிய நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சம்யுக்தா வெளியேறி இருந்தார். மற்ற போட்டியாளர்கள் வெளியேறியதைவிட சம்யுக்தாவின் வெளியேற்றம் தான் கொஞ்சம் பரபரப்பாக பேசப்பட்டது. அதற்கு முக்கிய காரணமே இவர் வெளியேறுவதற்கு முன்பாக இவருக்கு குறும்படம் போடப்பட்டு இருந்தது. அதே மற்ற போட்டியாளர்கள் வழி அனுப்பி வைக்கப்பட்ட விதத்தை விட சம்யுக்தாவை மற்ற போட்டியாளர்கள் வழியனுப்பி வைத்த விதம் மிகவும் நன்றாக இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

-விளம்பரம்-

பொதுவாக வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழையும் போட்டியாளர்கள் மத்தியில் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். கடந்த சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக மீரா மிதுன், கஸ்தூரி உள்ளே நுழைந்த பின்னர் நிகழ்ச்சியில் சூடு பிடித்தது. ஆனால், இந்த முறை அர்ச்சனா வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த போது ஒரு கேம் சேஞ்சராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை, மாறாக அவர் தொடர்ந்து அம்மா சென்டிமென்டை வீசி வருகிறார்.

- Advertisement -

இவர் உள்ளே நுழைந்த நாள் முதலே தனக்கான ஒரு குழுவை அமைத்துக் கொண்டு பிக் பாஸ் வீட்டில் ஒரு சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறார் மேலும் இவர் எதை செய்தாலும் சரி என்று சொல்வதற்காகவே இருப்பது போல தான் ரியோ, நிஷா, சோம் ஆகியோர் இருக்கின்றனர். மேலும், அர்ச்சனா ஒரு குரூப்பை அமைத்து விளையாடி வருகிறார் என்று பலரும் கூறி வருகின்றனர். இதை பல முறை கமலே கூறியிருக்கிறார். இப்படி ஒரு நிலையில் தன்னுடைய குழுவில் இருந்து எங்கேயோ மற்றும் சோமசேகர் பிரிந்து விடுவார்கள் என்று அர்ச்சனா அவர்களுக்கு வேதம் போதிய வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது.

கடந்த சில தினங்களாக சோம் சேகர் மற்றும் ரியோ இருவரும் கேப்ரில்லாவுடன் மிகவும் நட்பு பாராட்டி வருகிறார்கள். இதனால் எங்கே இருவரும் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருந்து சென்று விடுவார்களோ என்று அர்ச்சனா இருவரையும் அமர்த்தி நீங்கள் முன்பு போல என்னிடம் நேரத்தை ஒதுக்குவது இல்லை என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோவை குறும்படமாக போட்டு நெட்டிசன்கள் பலரும் ட்விட்டரில் ஷேர் செய்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

Advertisement