உள்ளே போனால் அந்த ராஜதந்திர ராணியிடம் இருந்து தள்ளி இருங்க- ரசிகரின் டீவீட்டை லைக்ஸ் செய்துள்ள அர்ச்சனா.

0
32343
archana
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்க துவங்கியுள்ளது. ஆரம்பத்தில் அனிதா மற்றும் சுரேஷ் பிரச்சனையை மட்டும் அரைத்து கொண்டு இருந்த பிக் பாஸ் தற்போது தான் போட்டியாளர்கள் மத்தியில் கொஞ்சம் நாரதர் வேலையை துவங்கி இருக்கிறார். அதுவும் Eviction Free Pass டாஸ்க்கின் போது சுரேஷ், போட்டியாளர்களை பற்றி பேசியதை அப்படியே அகம் டிவியில் போட்டு காண்பித்து சிண்டு முடிந்துவிட்டார். இதனால் சுரேஷுக்கு மற்ற சில போட்டியாளர்களுக்கு கொஞ்சம் வாக்கு வாதம் துவங்கியது.

-விளம்பரம்-

இப்படி ஒரு சமயத்தில் vj அர்ச்சனாவை பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் போட்டியாளராக அனுப்பியுள்ளார் பிக் பாஸ். அர்ச்சனா, பிக் பாஸின் முதல் நாளே கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், அர்ச்சனா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்ததால் பிக் பாஸில் கலந்துகொள்ள சிக்கல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. தற்போது எப்படியோ அர்ச்சனா பிக் பாஸில் கலந்து கொண்டு இருக்கிறார்.அர்ச்சனாவை பற்றி சொல்லவா வேண்டும். இவரை பார்த்ததும் போட்டியாளர்கள் அனைவரும் குஷியில் ஆழ்ந்தனர்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரசிகர் ஒருவர் பிக் பாஸ் குறித்து போட்ட ட்வீட் ஒன்றை லைக் செய்துள்ளார். அந்த டீவீட்டில் ‘அர்ச்சனா நீங்கள் பிக்பாஸில் கலந்துகொள்வது உண்மை என்றால், உங்கள் கேமை தனியாக விளையாடுங்கள். மேலும் அந்த முரடன் எப்படிப்பட்டவர் என்பதை உணர வையுங்கள் . அதேபோல அந்ததந்திர ராணியை, தான் எப்படி ஒரு தந்திரவாதி என்பதை உணர வையுங்கள். அவர்களிடம் இருந்து தள்ளி இருங்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை வைத்து பார்க்கும் போது அந்த முரடன், சுரேஷ் சக்ரவர்தியாக இருக்குமோ என்று எண்ணம் தோன்றுகிறது.

இன்று வெளியான முதல் ப்ரோமோவில் அர்ச்சனா, உள்ளே நுழைத்த போது சுரேஷ் சக்ரவர்த்தியை கிண்டல் செய்யும் விதமாக சிவாஜி படத்தில் மொட்ட பாஸ் செய்வது போல தலையில் தட்டி கேலி செய்து இருந்தார். அதே இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில் கூட சுரேஷ் சக்ரவர்த்தியை கலாய்த்து இருந்தார் அர்ச்சனா. இதை வைத்து பார்க்கும் போது கண்டிப்பாக அர்ச்சனாவிற்கும் சுரேஷ் சக்ரவர்த்திக்கும் எதாவது முட்டிக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அந்த தந்திர ராணி தான் யார் என்பது தெரியவில்லை.

-விளம்பரம்-
Advertisement