Mr&Mrs சின்னத்திரையில் அர்ச்சனாவை மாற்ற சொன்ன ரசிகர்கள் – அர்ச்சனா கொடுத்த மறைமுக பதிலடி.

0
18914
archana
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில் பிரபல தொகுப்பாளினியான அர்ச்சனாவும் ஒருவர். ஆரம்பத்தில் சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்த அர்ச்சனா கடந்த சில வருடங்களாக ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ஆஸ்தான தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். அதே போல இவர் முதன் முதலில் காமெடி டைம், இளமை புதுமை போன்ற நிகழ்ச்சியில் பணியாற்றினார்

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-127-1024x534.jpg

மேலும், தமிழில் கூட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்தது. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவரது பெயர் கொஞ்சம் டேமேஜ் ஆனது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த அர்ச்சனா, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக களமிரங்கி இருக்கிறார்.

இதையும் பாருங்க : அசுரன் படத்த ‘நாரப்பானு’ நாறடிச்சது பத்தாம, இப்போ கர்ணன் படத்திலும் கைவைத்த தெலுங்கு இயக்குனர். ஹீரோ யார் தெரியுமா ?

- Advertisement -

அந்த வகையில் சமீபத்தில் இவர் Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக களமிறங்கி இருக்கிறார். சமீபத்தில் தான் இந்த நிகழ்ச்சியின் முதல் இரண்டு எபிசோடு ஒளிபரப்பானது. ஆனால், இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வந்த போதே அர்ச்சனா தொகுப்பாளினியாக இருப்பதை பார்த்த பலரும் அர்ச்சனாவை இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக போட வேண்டாம் என்று கமன்ட் செய்து வந்தனர்.

மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் 3யில் இவரது ஆங்கரிங் வேண்டாம் என்று பலர் கமன்ட் செய்து வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் மணிமேகலையை தொகுப்பாளினியாக போட வேண்டும் என்று சிபாரிசு செய்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் Mr & mrs சின்னத்திரை நிகழ்ச்சி செட்டில் எடுத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்த அர்ச்சனா, ஏன் இவ்ளோ வெறுப்பு, அதெல்லாம் கொஞ்சம் தள்ளி வைங்க. எந்த புளோல லைப் போதோ அதே புளோலபோங்க, இது யாருக்கெல்லாம் புரியலையா நீங்க வெளிய போகலாம். ஒரு சிரிப்புக்கு பின்னாடி எவ்ளோ போராட்டம் இருக்குனு உங்களுக்கு புரியலைனா வெளிய போய்டுங்க. ஒரு போராளிக்கு தான் அடிபட்டத்தோட காயம் என்னனு என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement