அட, பிக் பாஸ் ஐஸ்வர்யாவா இது. முதன் முறையாக தனது சிறு வயது புகைப்படத்தை வெளியிட்டிருக்கார்.

0
7409
aiswarya-Dutta
- Advertisement -

தமிழ் சினிமாவின் பிரபல நடிகை தேவையாணி சகோதரர் நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா தத்தா. அதன் பின்னர் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் வந்த இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலலத்தை மட்டுமல்லாமல் இவரது வாழ்க்கையும் மாற்றியது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜி மஹா ராணி டாஸ்க்கில் பாலாஜி மீது குப்பை கொட்டியதால் பெரும் பிரபலபும் சர்ச்சையும் இவருக்கு ஏற்பட்டது. இதனால் இவருக்கு பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமும் ஏற்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தை பிடித்த இவர், ரசிகர்கள் மனதில் முதல் இடத்தை பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் ஆரியுடன் ஒரு படம், நடிகர் மஹத்துடன் ‘கெட்டவனு பேரெடுத்த நல்லவன் டா ‘ போன்ற படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய் டிவியில் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்ற ஐஸ்வர்யா தான் ஆரியுடன் நடித்துள்ள புதிய படத்தின் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டார்.

இதையும் பாருங்க : யூத் பட நடிகையா இது. குழந்தையும் குட்டியுமா இப்படி மாறிபோய்ட்டாங்க.

- Advertisement -

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி தனக்கு மிகப்பெரிய வாழ்க்கையை கடுத்துள்ளதாகவும், பிக் பாஸை நான் எப்போதும் மறக்கமாட்டேன் என்றும் கூறியிருந்தார் ஐஸ்வர்யா. மேலும், தற்போது 4 பாடங்களில் கமிட் ஆகியும் இருக்கிறார். இப்படி படங்களில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் அம்மணி அடிக்கடி தன்னை பற்றிய புகைப்படங்களையும், அப்டேட்களையும் பதிவிட்டு வருவதை மட்டும் எப்போதும் மறப்பதில்லை.

அந்த வகையில் சமீபத்தில் தனது சிறு வயது புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா. தனது பழைய போட்டோ ஆல்பத்தில் இருந்து இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளதாக ஐஸ்வர்யா தத்தா பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது பல ஆயிரம் லைக்ஸ்களை குவித்து வருகிறது. மேலும், சமூக வலைதளத்தில் வைரலாகவும் பகிரப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-
Advertisement