பிக் பாஸ் வீட்டிற்குள் அரை குறை ஆடையில் நுழைந்த முன்னாள் போட்டியாளர்.!

0
5027
Ayswarya-Dutta
- Advertisement -

பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று கவின் வெளியேறிய செய்திதான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் சில நாட்களே இருந்த நிலையில் பிக்பாஸ் அறிவித்திருந்த 5 லட்ச ரூபாய் பரிசுத்தொகையை எடுத்துக்கொண்டு கவின், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.கவின் வெறியேறியது சக போட்டியாளர்களும் அவரது ரசிகர்களும் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருந்து வருகின்றனர்.

-விளம்பரம்-

நேற்றைய நிகழ்ச்சியில் சக போட்டியாளர்கள் எவ்வளவு கூறியும் அவர்களின் பேச்சைக் கேட்காத கவின், நான் இந்த முடிவை தெளிவாகத்தான் எடுத்திருக்கிறேன் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தார். கவின் வெளியேறியதால் இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

- Advertisement -

இன்று வெளியான முதல் பேரோமோவில் கவினை நினைத்து மனம் நொந்து அழுதார் லாஸ்லியா. தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் கவின் குறித்து கவினின் உயிர் நண்பரான சாண்டி மனமுருகி பேசியுள்ளது அனைவரயும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரான ஐஸ்வர்யா தத்தா அறையும் குறையுமான ஆடையில் உள்ளே சென்றுள்ளார்.

கவின் வெளியேற இருக்கிறார் என்ற செய்தியை கேட்டு கவின் ஆர்மி மிகுந்த சோகத்தில் மூழ்கியுள்ளது. இதனால் கவின் இல்லை என்றால் பிக் பாஸ் இல்லை என்று குறிப்பிடும் வகையில் #nokavinnobiggboss என்ற ஹேஸ் டேக்கையும் கவின் ஆர்மி நேற்றில் இருந்து சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement