இது என்னடா ஹேர் ஸ்டைல்.! கிண்டலுக்கு உள்ளான ஐஸ்வர்யாவின் புதிய கெட்டப்.!

By Rajkumar · 6/6/2019

கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் என்ற ரியாலிட்டி ஷோவில் போட்டியாளர்களாக களமிறங்கிய ஐஸ்வர்யா தத்தா தற்போது மஹத் நடித்து வரும் 'கெட்டவனு பேரெடுத்த நல்லவன்டா ' என்ற புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்கள்.

மேற்கு வங்காளத்தில் இருந்து வந்த ஐஸ்வர்யா தத்தா ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அவரின் அடுத்த படத்திற்கு வழிவகுத்துள்ளது. இந்தப் படத்தை பிரபு ராம் சி இயக்குகிறார்.

இதையும் படியுங்க : அஜித் ஜீரோ, பிரியாணி மட்டும் நல்லா செய்வார்.! நடிகர் பப்லு நக்கல் பேட்டி.! 

இவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே இவர் ஓரினச்சேர்க்கையாளராக நடித்திருந்த ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போல அம்மணி பல கவர்ச்சி யான புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாகவே வைத்து வருகிறார்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா தனது ஹேர் ஸ்டைலை பார்பி கட் செய்துகொண்டுள்ளார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பலர் இந்த புதிய கெட்டபை ஹாஹா ஹோஹோ என்று பாராட்டினாலும் சிலரோ பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full