தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என்றழைக்கப்படும் அஜித் அவர்கள், நிஜ வாழக்கையில் மிகவும் சாந்தமான ஒரு மனிதர். அத்தோடு தன்னிடம் பழகுபவர்கள் மற்றும் சக நடிகர்களுடன் மிகவும் மரியாதையாக நடந்துகொள்வர். ஆனால், அஜித் குறித்து படு மோசமாக விமர்சித்துள்ளார் பபலு்.
நடிகரான பிரிதிவிராஜ் மலையாளம், தமிழ், தெலுகு என்று எண்ணற்ற மொழிகளில் நடித்துள்ளார். அத்தோடு அஜித்துடன் 1998 ஆம் ஆண்டு வெளியான “அவள் வருவாளா ” என்ற படத்தில் மட்டும் நடித்துள்ளார். மேலும், அஜித் மற்றும் பப்லு இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் தான்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பப்லுவிடம், அஜித் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பப்லு, அஜித் ஜீரோ டெடிகேஷன் உள்ள ஒரு நபர், அவருக்கு நடிப்பை பற்றியெல்லாம் கவலை கிடையாது. அவருக்கு சூப்பர் ஸ்டார் டம் என்பது அமைந்து விட்டது. ஆனால், பிரியாணி மட்டும் நன்றாக செய்வார் என்று அஜித்தின் மறு பக்கத்தை பற்றியும் சொல்லியுள்ளார்.