‘உண்மையான Boomer நீ தான்’ – தன் முன்னாள் மனைவியின் ஆடை குறித்து பேசிய அசீமை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.

0
1352
azeem
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அஸீம் தனது மனைவியின் ஆடை குறித்து பேசி இருக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது பாதி கட்டத்தை தாண்டி இருக்கிறது.இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். 21 போட்டியாளர்களில் இருந்து 7 போட்டியாளர்கள் போக தற்போது 14 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர்.

-விளம்பரம்-

வழக்கம்போல இந்த சீசனிலும் ஏகப்பட்ட விஜய் டிவி விவரங்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் பிரபலமடைந்த அசியமும் கலந்து கொண்டிருக்கிறார். இந்த சீசனில் அசீம் தான் ஆரம்பம் முதலே மிகவும் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் இருந்து மற்ற போட்டியாளர்களிடம் அவதூறாக பேசுவது, வம்பு இழுப்பது, ஆக்ரோஷமாக விளையாடுவது என்று தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதனை கமல் கூட பலமுறை எச்சரித்து இருக்கிறார்

- Advertisement -

ஆனால் அதே புறம் பிக் பாஸ் வீட்டில் அசீம் தான் உண்மையாக விளையாடுகிறார் என்றும் அவருக்கு ஆதரவும் இருக்கத்தான் செய்கிறது அஸீமிற்கு திருமணம் ஆகி ஒரு மகனும் இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு தனது மனைவியை பிரிவதாக அறிவித்து இருந்தார் அசீம், இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்த அசீம்அனைவருக்கும் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நாங்க சட்டப்படி பிரிஞ்சிட்டோம். பரஸ்பரம் ஒப்புக்கொண்டு இந்த விவாகரத்து கிடைத்துள்ளது. ஆனால் இதுகுறித்து மேற்கொண்டு எதுவும் பேச நான் விரும்பவில்லை என்றும் கூறி இருந்தார்.

ஆனால், அஸீமிற்கு ஷிவானியுடன் தொடர்பு இருப்பதாக அஸீமுடன் நடித்த சிலர் பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி கொடுத்து இருந்தனர். இது குறித்து அந்த குறிப்பிட்ட பத்திரிகையில் கூறப்பட்டு இருந்ததாவது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே அஸீமிற்கு ஸோயா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இரண்டு மூன்று வருடங்கள் நல்லபடியாக வாழ்ந்து கொண்டிருந்தவர்கள். இடையில் ஷிவானியுடன் ஏற்பட்ட பழக்கத்தாள் தற்போது பிரச்சினை ஏற்பட்டு விவாகரத்து வரை சென்று இருக்கிறது என்று அஸீமுடன் நடித்த நடிகர் ஒருவர் கூறியதாக அந்த பத்திரிக்கையில் எழுதப்பட்டது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது மகன் குறித்து அடிக்கடி பேசி வருகிறார் அசீம். இப்படி ஒரு நிலையில் அசீம் தனது மனைவி குறித்து பேசி இருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில் பேசியுள்ள அவர் ‘ஒரு நிகழ்ச்சிக்கு சென்றால் இப்படி (மாடர்ன்) ட்ரெஸ் பண்ணலாமா, ஆனால், அவள் அப்படி தான் ட்ரெஸ் அணிவால். ஒரு நிகழ்ச்சிக்கு போனால் நான் ஏன் ஸ்கர்ட் போட்டு வரக்கூடாது என்று கேட்பாள்’இதை கேட்கப்போய் தான் எங்களுக்குள் முதல் சண்டை வந்தது. முதல் வாக்குவாதமே ட்ரெஸ்காக தான் வந்தது’ என்று பேசி இருக்கிறார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை கண்ட நெட்டிசன்கள் பலரும் உண்மையான பூமர் விக்ரமன் இல்லை அசீம் தான் என்று கேலி செய்து வருகின்றனர். அதிலும் ஒரு சிலர் ‘மனைவியின் dressing பிடிக்கலைனு சன்டை போட்டு Divorce வாங்கிய ClownAzeem போன்ற பிற்போக்கு வாதிகளே Boomers.’ உரிமையையும் நியாத்தையும் கேட்பவன் முற்போக்குவாதி. இவர் போன்ற ஆட்கள் தா சமுதாயத்திற்கு தேவை.கேள்வி கேட்பவனை கண்டாலே மூடர்களுக்கு பயம் தா போல என்றும் அசீமை விமர்சித்து வருகின்றனர்.

Advertisement