அமுதவானனை உண்மையில் தாக்கினாரா அஸீம் ? வைரலாகும் நேற்றய முழு வீடியோ இதோ.

0
338
azeem
- Advertisement -

அசீம் – அமுதவாணனின் சண்டை குறித்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அனைவரும் காத்து இருந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விஜய் டிவியில் தொடங்கி 49 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் விறுவிறுப்பை தக்கவைத்து கொள்ள பிக் பாஸும் போட்டியாளர்களுக்கு பலவிதமான டாஸ்குகளை கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம் , அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருந்தார்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6:

இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். 21 போட்டியாளர்களில் இருந்து 7 போட்டியாளர்கள் போக தற்போது 14 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர். இந்த வாரம் அசீம் கேப்டன் பதவியை வென்றார். அசீம் கேப்டன் ஆன உடனே பல அதிரடி மாற்றங்கள் செய்து இருந்தார்.

பழங்குடியினர் மற்றும் ஏலியன் டாஸ்க் :

-விளம்பரம்-

இது ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்கப்பட்டது. பின் வழக்கம் போல் பிக் பாஸ் இந்த வாரம் டாஸ்க் கொடுத்து இருக்கிறார்கள். அதாவது, பழங்குடியினர் மற்றும் ஏலியன் டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த சீசனில் இந்த டாஸ்கின் போது போட்டியாளர்கள் மத்தியில் கடுமையான சண்டைகள் ஏற்பட்டிருந்தது. தற்போது அதை தான் பிக் பாஸ் எதிர்பார்த்து இந்த முறை கொடுத்து இருக்கிறார். பழங்குடியினரிடம் இருக்கும் செல்வத்தை ஏலியன்கள் திருட வேண்டும். ஏலியன்கள், பழங்குடியினரை எப்படி வேண்டுமானாலும் கோபப்படுத்தலாம் என்று பிக் பாஸ் கூறி இருக்கிறார்.

இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரோமோ:

இதனால் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து இருக்கிறார்கள். இந்த டாஸ்க் கொடுக்கப்பட்டதிலிருந்து போட்டியாளர்கள் மத்தியில் கடுமையான வாக்குவாதம் சென்று கொண்டிருக்கின்றது. அந்த வகையில் நேற்றைய எபிசோடில் அசீம் – அமுதவாணன் பயங்கரமாக சண்டை போட்டிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, ஏலியன் அணியில் இருக்கும் அமுதவாணன் பழங்குடியினர் அணியில் இருந்த கதிரவனை கைது செய்து பயங்கரமாக கொடுமைப்படுத்தியிருந்தார்கள்.

வைரலாகும் வீடியோ :

இதனால் கோபப்பட்ட அசீம் அவர்களுக்கு இடையில் தலையிட்டு அமுதவாணனிடம் சண்டை போட்டு இருக்கிறார். உடனே, அமுதவாணனுக்கும், அசிமுக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகி அசீம் உடைய கை தெரியாமல் அமுதவாணனின் கழுத்தில் பட்டது. ஆனால், அமுதவாணன், நீ என்னை எதுக்கு அடிக்கிறாய் என்று பயங்கரமாக கோபப்படுகிறார். உடனே அசீம், என்னை அடி, அடித்து பார் என்று கத்துகிறார். இப்படி இவர்கள் இருவரும் சண்டை போட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலருமே, அசீம் அடிக்கவில்லை என்றாலும் அவர் அடித்ததாக அமுதவாணன் சொல்வது தவறு என்றும், அசீம் இடையில் சென்றது தவறு என்றும் கூறுகிறார்கள். இந்த வார இறுதியில் இது குறித்து கமலஹாசன் என்ன சொல்லப் போகிறார்? என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Advertisement