Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/பிக் பாஸ்2022.12.25பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

'வெளிய நான் அப்படி இல்ல சார்' - அப்போ இது என்ன ? அசீம் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த வீடியோவை பகிர்ந்து கலாய்க்கும் ரசிகர்கள்.

எழுதியவர்Rajkumar25 டிசம்பர், 2022 அன்று 09:46 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிக் பாஸ் சீசன்6ல் போட்டியாளராக பங்கேற்றுள்ள அசீம் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்துகொண்ட விதத்தின் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது . பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 2 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் 10 போட்டியாளர்கள் மட்டுமே இருந்து வருகின்றனர். இதனால் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக பிக் பாஸ் பல வித்தியாசமான டாஸ்குகளை கொடுத்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் "கானா காணும் காலங்கள்" டாஸ்கானது வழங்கப்பட்டிருந்தது.

https://twitter.com/itsThaniOruvan/status/1606715365769502721

இந்த நிலையில் டாஸ்கில் முடிவில் 1 முதல் 10 வரை போட்டியாளர்கள் அவர்களே தரம் பிரித்து கொள்ளும்படி சொல்லப்பட்டது. இங்குதான் பிரச்னை ஆரம்பமானது.முதலில் அசீம் முதலாம் இடத்திற்கு வந்து நிற்க ஷிவின் மற்றும் விக்ரமன் தாங்கள் நேர்மையாக விளையாடியிருக்கிறோம் எங்களுக்கு தான் முதல் இடம் சரியாக இருக்கும் என பிக் பாஸிடம் கூற உடனே விக்கிரமனுக்கும் அசீமுக்கும் தரமான சண்டை நடந்தது.

அதற்கு பிறகு பேசிய அசீம் இந்த முதல் இடத்தை கொடுக்க வேண்டும் என்று சொன்னால் நாம், அமுதவாணன், மணிகண்டன், எடிக்கே போன்றவர்களுக்கு மட்டும் தான் கொடுப்பேன் என்று சொல்ல ஷிவினுக்கும் அசீமிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இந்தனிடையே எடிகே தான் என்ன ஜோடி சேர்ந்து அசீமுடன் நடனமா ஆட போகிறேன் என்று கூறினார். இந்த நிலையில் விக்ரமனை அசீம் நீங்க கட்டப்பஞ்சாயத்து செய்யாதீர்கள் என்று கூற மீண்டும் சண்டை வெடித்து.

https://twitter.com/chettyrajubhai/status/1607046317402120192

அதற்கு பின்னர் ஷிவின் மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது அசீம் "நீ என்ன பேசினாலும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்ன வேண்டுமாலாலும் பேசு" எனக் அநாகரீகமாக பேச ஷினின் உங்களுக்கு பேச தைரியம் இல்லை எனக் கூற அசீமுக்கும் ஷிவினிக்கும் இடையே சண்டை பூதாகரமாக வெடித்தது. அசீம் என்னை தைரியம் இல்லை என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தால் உனக்கு மரியாதை கெட்டுவிடும் என்று விவாதிக்க தொடங்கினார்.

இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இந்த விவாதம் சண்டையாக மாறவே "தைரியமில்லை என்றெல்லாம் சொல்லாத மூஞ்சிய பாரு ஆமைக்குஞ்சு அவிச்சு வச்ச மாதிரி இருந்து பேசுரா" என்று கூற மணிகண்டன் அசீமை சமாதானப்படுத்தினார். பின்னர் சண்டை ஓரளவு குறையவே ஷிவின் 9வது இடத்திற்கும், விக்ரமன் 10வது இடத்திற்கும் சென்று நின்றனர். ஆனால் ஷிவினை இப்படி தரை குறைவாக பேசிய அசீம் பேசியதை விஜய் டிவி மற்றும் ஓடிடியில் 1 மாணிநேர காட்சியில் காட்டவில்லை.

https://www.youtube.com/watch?v=z6WpATZb_EY&t=589s

இப்படி வாராவாரம் மற்ற போட்டியாளர்களை தொடர்ந்து தரக்குறைவாக பேசி வரும் அசிமை வார இறுதியில் கமல் வருத்தெடுப்பதும், அப்போது தலையாட்டி விட்டு பின்னர் மீண்டும் தன்னுடைய அதே பாணியை அசீம் பின் தொடர்வதும் வாடிக்கையாகத்தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சிகள் கூட கடந்த வாரம் அசீம், விக்ரமன் மற்றும் சிவினிடம் நடந்து கொண்ட முறையை குறித்து கமல் கண்டித்து இருந்தார்.

ஆனாலும் தான் செய்தது தவறு இல்லை என்பது போலத்தான் அசீம் வாதாடி இருந்தார். மேலும், நான் வெளியில் எப்படி இருந்தது கிடையாது. ஏதாவது பிரச்சனை என்றால் கூட விலகிச் சென்று விடுவேன். இவ்வளவு வாதிட மாட்டேன் என்று அசீம் கூறி இருந்தார். ஆனால், அசீம் குறித்து அவருடன் நடித்த பல நடிகர்கள் அசீம் படப்பிடிப்பில் கூட எவ்வாறு சக நடிகர்களை தர குறைவாக பேசுவார்கள் என்று பல வீடியோக்களில் கூறியிருக்கிறார்கள். அந்த வீடியோக்களை தற்போது ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.

'வெளிய நான் அப்படி இல்ல சார்' - அப்போ இது என்ன ? அசீம் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த வீடியோவை பகிர்ந்து கலாய்க்கும் ரசிகர்கள்.

அதே போல ஷூட்டிங் ஸ்பாட்டில் அஸீமிடன் போலீஸ் என்று சொல்லி அவரிடத்தில் Prank செய்து இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் Prank என்று தெரியாமல் இருக்கும் அசீம், போலீஸ் என்று சொல்லியும் அவர்களிடம் திமிராக தான் பேசி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவ, போலீஸ் என்று சொன்னால் கூட அசீம் இப்படி தான் திமிராக பேசுவாரா இது தான் இவர் உண்மையான குணமா என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.

தலைப்புகள்
#Bigg Boss Tamil 6#Azeem#பிக் பாஸ் அசீம்#அசீம்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement