இவனை வெளியில் அனுப்புங்கள் – லாரி ட்ரைவர்கள் குறித்து தர குறைவாக பேசிய அசீமால். கொந்தளித்த லாரி ஓட்டுனர்கள்.

0
289
- Advertisement -

பிக் பாஸ் 6 போட்டியாளர்களில் தற்போது மிகவும் பிரபலமான போட்டியாளராக பிக் பாஸில் வலம் வந்து கொண்டிருப்பவர் அசீம். இவர் பிக் பாஸ் வீட்ற்குள் வந்ததில் இருந்தே மற்றவர்களை பற்றி பேசி பல விதமான சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில் தற்போது லாரி ஓட்டுனர்களை தரக்குறைவான தரக்குறைவாக பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடக்கம் முதலே ரசிகர்களை ஈர்த்த போட்டியார் யார் என்றால் அது அசீம் தான், இவர் சின்னத்திரை நடிகராவார். மேலும் இவர் கடைக்குட்டி சிங்கம், பிரியமானவள், பூவே உனக்காக போன்ற பல சீரியல்கள் இவர் கதாநாயகனாக நடித்துள்ளார்.

-விளம்பரம்-

அட்ராசிட்டி செய்யும் அசீம் :

இந்த நிலையில்தான் பிக் பாஸ் சீசன்6ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே தன்னை மற்றவர்கள் தன்னை ரசிக்க வேண்டும் என்று சக போட்டியாளர்களை மட்டம் தட்டி பேசுவதும், அவர்களை அவதூறாக பேசுவதுமாக இருந்து வருகிறார். அதனால் வாரத்தின் இறுதி நாட்களில் பிக் பாஸ் தொகுப்பாளராக கமலஹாசனிடம் தீட்டு வாங்குவதுமாக இருந்து வருகிறார். மேலும் இவர் இல்லை என்றால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவாரசியம் இல்லை என்று ரசிகர்கள் சொல்லும் அளவிற்கு தான் அசீம் இருந்து வருகிறார்.

- Advertisement -

தட்டி கேட்கும் விக்ரமன் :

ஆனால் என்னதான் ரசிகர்கள் இருந்தாலும் அசீம் மற்றவர்களை இழிவாக பேசும்போதெல்லாம் விக்ரமன், ஷினின் போன்றவர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அசீம் காய்கறி வெட்டிக் போது “எங்கள் லாரி டிரைவர்கள் எல்லோரும் சரக்கு எடுத்து செல்லும் போது லேட் ஆகிட்டாலோ இல்லை சரியான நேரத்தில் கம்பெனியில் கொண்டு சேர்க்க வில்லை என்றாலோ, செமையா தீட்டு வாங்குவானுங்க. பாய் ஓனருக்கு பயந்து வேகமா ஓட்டனுனு சொல்லுவானுங்க என்று கூறிக்கொண்டிருக்கும் இடையில் அவர் பேசுவது (பீப்) என்று அதாவது எடிட் செய்யப்பட்டது.

வைரலாகும் வீடியோ :

இந்த வீடியோ வரலாகவே பிக் பாஸ் ரசிகர்கள் அசீமை கடுமையாக திட்டி வருகின்றனர். ஆனால் அசீம் மற்ற ஓனர்கள் அவர்களின் டிரைவர்களை செய்வதை தான் இப்படி அவர் சொல்லியிருக்கிறார் அவருடைய லாரி டிரைவரை அப்படி சொல்லவில்லை என்று அவருடைய ரசிகர்கள் கூறினாலும், பலர் லாரி டிரைவர்கள் என்றால் இளக்காரமாக இருக்கிறதா? அவன் இவன் என்று மரியாதையே இல்லாமல் பேசுகிறார் என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

கழுவி ஊதும் நெட்டிசன்கள் :

மேலும் சிலர் அசீம் மட்டும் தன்னை பிக் பாஸ் வீட்டில் அவன் என்று சொன்னால் கோவப்படும் போது இவர் மட்டும் `தங்களுடைய குடும்பத்திற்காக உயிரை பனையம் வைத்து ஒரு நொடி கண்ணயர்ந்தாள் மரணம் என்றிருக்கும் போது அவர்களை மரியாதையே இல்லாமல் அவன் இவன் என்று பேசிக்கொண்டிருக்கிறார். அதையும் அங்குள்ள சில போட்டியாளர்களும் சிரித்துக் கொண்டு கேட்டுக்கொண்டிருக்கின்றனர். என்று அந்த விடியோவை பகிர்ந்து அசீமை கடுமையாக தீட்டி வருகின்றனர் நெட்டிசன்கள்.

லாரி ஓட்டுனர்கள் புகார் :

இந்த நிலையில் அசீம் பேசிய வீடியோ வைரலாகவே நாமக்கல் லாரி டிரைவர் அசோசேஷன் முகப்பு பக்கத்தில் `விஜய் டிவி பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டு இருக்கும் இந்த நாராவாயன் அசீம் லாரி டிரைவர்களை கேட்ட வார்த்தைகளில் மிகவும் அசிங்கமாகவும் டிரைவர் தொழிலை கேவலமாகவும் கொச்சையாக பேசி உள்ளான். இவனை கண்டித்து விஜய் டிவி தக்க நடவடிக்கை எடுத்து இவனை போட்டியில் இருந்து வெளியேதும்படி லாரி டிரைவர் சங்கம் கோரிக்கை வைக்க முன்வரவேண்டும் என்று தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

Advertisement