இப்படி ஒரு டாக்சிக் பெர்சனாலிட்டியை பிக் பாஸ் நிகழ்ச்சி கண்டதில்லை – அசீம் குறித்த பதிவை பகிர்ந்த பனிமலர்.

0
600
panimalar
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி இருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன்,ரச்சித்தா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். தற்போது அசீம், விக்ரமன், ஷிவின், மைனா நந்தினி, அமுதவனான், என்று 5 பேர் மட்டும் விளையாடி வருகின்றனர்.

-விளம்பரம்-

மேலும், கடந்த செவ்வாய் கிழமை நடத்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் மற்றும் போட்டியாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பணப் பை டாஸ்க் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. பொதுவாக பணப் பெட்டி டாஸ்க் மிகவும் சுவாரசியமாக இருக்கும் பிக் பாஸ் ஒவ்வொரு கட்டமாக தொகையை ஏற்றிக்கொண்டு இருக்க அதை யார் எடுத்தச் செல்வார் என்ற ஒரு ஆர்வம் ஏற்படும். அந்த வகையில் கடந்த செவ்வாய் கிழமை அறிமுகப்படுத்தப்பட்ட பணப் பை டாஸ்க் ஒரு சில நாட்கள் நீளும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால், ஆரம்ப தொகையான 3 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினார் கதிர். இந்த சீசனில் பல பரிட்சியமான முகங்கள் கலந்துகொண்டாலும் இந்த சீசனில் கண்டட் கொடுக்கும் நபராக இருந்தது அசீம் தான். இந்த சீசனில் ஆரம்பம் முதலே ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்து வருவது அசீம் தான். இதுவரை பல முறை நாமிநேஷனில் வந்த போதிலும் ஒவ்வொரு முறையும் அதிக வாக்குகளை பெற்று காப்பாட்றப்பட்டு வந்தார்.

அடிக்கடி எதாவது பேசி சர்ச்சையில் சிக்கிகொள்வதை வாடிக்கையாக வைத்து வருகிறார் அசீம். என்னதான் கமல் அடிக்கடி அறிவுரை கூறி வந்தாலும் வார இறுதிக்கும் பின் மீண்டும் தனது அடாவடி தனத்தை தொடர்ந்து வருகிறார் அசீம். என்பதான் இவர் ஆக்ரோஷமாக விளையாடி வந்தாலும் இவர் தான் பிக் பாஸ் வீட்டில் உண்மையாக தனது குணங்களை காண்பித்து வருகிறது என்று சிலர் இவருக்கு ஆதரவும் தெரிவித்து தான் வருகின்றனர்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் முகநூல் வாசி ஒருவர் அசீம் குறித்து பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில் ‘உங்கள் வாழ்க்கையும் எதிர்காலமும் சிறந்து விளங்க உங்கள் நண்பர்கள் வட்டத்திலோ, உறவினர் வட்டத்திலோ அசீம் போன்ற டாக்சிக் அயோக்கியன்கள் இருந்தால் அவர்களுடனான உறவை தயவு தாட்சண்யம் பார்க்காமல் உடனடியாக உடைத்தெறியுங்கள். இப்படியான சைக்கோ கம்னாட்டிகளை ஸ்கூல், காலேஜ், பணியிடம் என வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் சந்தித்திருப்போம். அசீம் போன்ற கிறுக்கனை மதம், கட்சி அடிப்படையில் ஆதரிப்பவர்களாக இருந்தாலும் அவர்களை நட்பு வட்டத்தை விட்டு கண்ணை மூடிக் கொண்டு துரத்தி விட வேண்டும்.

கடந்த ஐந்து சீசன்களிலும் வெற்றியாளர் தேர்வில் முரண்கள் இருந்தாலும் இப்படி ஒரு டாக்சிக் பெர்சனாலிட்டியை பிக் பாஸ் நிகழ்ச்சி கண்டதில்லை. இவன் வெற்றி பெற்றால் வாராவாரம் அறம், நேர்மை என்று வகுப்பெடுக்கும் கமலுக்கு அதை விட வேறு கேவலம் இல்லை’ என்று பதிவிட்டு இருந்தார். இந்த பதிவை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பனிமலர் ‘கெட்ட வார்த்தையை கூட விட்டுவிடலாம் ஆனா இது 200% உண்மை. இந்த மாதிரி கேவலமான ஒருதன நான் பாத்ததே இல்ல’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement