‘சீமானின் அன்பு தம்பி நான்’ அசீம் போட்ட பதிவு – சீமானின் விடீயோவையே போட்டு கேலி செய்யும் நெட்டிசன்கள்.

0
757
seeman
- Advertisement -

பிக் பாஸ் பிரபலம் அசீம் நாம் தமிழர் கட்சி சீமானை சந்தித்து புகைப்படம் டுத்துக்கொண்டது தற்போது சோசியல் மீடியாவில் பேசுபொருளாக மாறியுள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த மாதம் தான் நிறைவடைந்தது 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் அசீம், விக்ரமன் சிவின் ஆகிய மூன்று பேர் தகுதி பெற்று இருந்தார்கள். இதில் அசீம் முதலிடத்தையும் அவரைத் தொடர்ந்து விக்ரமன் மற்றும் சிவின் ஆகிய இருவரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

முதல் பட்டத்தை வென்ற அசிமிற்கு 50 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், அவருக்கு சிறப்பு பரிசாக ஒரு புதிய மாருதி கார் வழங்கப்பட்டு இருந்ததுஇந்த சீஸனில் விக்ரமன் தான் வெல்வார் என்று பலரும் எதிர்பார்த்துவந்தனர். இப்படி ஒரு நிலையில் அசீம் வென்றதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இந்த முடிவால் அதிருப்தி அடைந்து இருக்கின்றனர். அப்போ அடாவடியாக ஆடி, மற்றவர்களை இழிவுபடுத்தி விளையாடினால் பிக் பாஸில் வென்று விடலாமா என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும், விஜய் டிவிக்கு எதிராக Boycott விஜய் டிவி என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வரும் ரசிகர்கள் விக்ரமன் ஹேஷ் டேக்கையும் ட்ரெண்ட் செய்து வந்தனர்.

- Advertisement -

சீமானை சந்தித்த அசீம்

அசீம் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது பலரிடம் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டும், அடிக்கடி எதாவது அவதூராகா சொல்லிக்கொண்டும் இருந்தார். இந்த நிலையில் அசீம் வெற்றிபெற்றது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. சிலர் அசீமை பாராட்டினாலும் பலர் தொடர்ந்து அசீம் வெற்றி அடைந்தது குறித்து அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் தான் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை பாராட்டி ஒரு விழா நடந்தது. அந்த விழாவில் கலந்து கொண்டார் பிக் பாஸ் அசீம்.

ட்விட்டர் பதிவு :

மேலும் இந்த நிகழ்ச்சியில் சீமானை மேடையில் சந்தித்து முத்தம் கொடுத்து அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் அசீம். அந்த பதிவிற்கு கீழ் “எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்குப் பிறப்பினும் அயலான் அயலானே” கொள்கை, கோட்பாடு, தத்துவத்தை யெல்லாம் தாண்டிய உறவிது !! என்றும் அண்ணன் சீமானின் அன்பு தம்பி தான் நான் என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவு தற்போது ஷோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

நெட்டிசன்கள் கேலி :

இந்த நிலையில் பிக் பாஸ் போட்டியாளர் அசீம் தொடக்கத்தில் தான் ஒரு திராவிடர் எனவும், திமுக கட்சியை ஆதரித்தும் பேசி வந்தார். அதோடு குறிப்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்திகா உதயநிதி போன்றவர்களின் பெயர்களை அடிக்கடி பயன்படுத்தி வந்தார் அசீம். இதனால் இவர் திமுகவின் ஆதரவாளர் தான் என பலரும் கூறி வந்தனர். இந்நிலையில் அசீம் திடீரென நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை சந்தித்து முத்தும் கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்டது நெட்சன்கள் மத்தியில் கேலிக்கு உள்ளக்கி உள்ளது.

சீமான் விடியோவை டேக் செய்யும் நெட்டிசன்கள் :

ஆனால் நான் தமிழர் கட்சி சீமான் பல முறை தமிழ் தாய் மொழியாக இருந்து தமிழனாக இருப்பவன் மட்டுமே தமிழன் என்றும், உருது பேசும் ஒரு இஸ்லாமியர் தமிழனாக இருக்க முடியாது. அப்படி அவரை நான் தமிழர் என்று ஏற்றுக்கொண்டால் நான் பைத்தியக்காரனாக இருக்க வேண்டும், இல்லையேல் தன்னை தமிழர் என்று கூறிக்கொள்ளும் அவர் பைத்தியமாக இருக்க வேண்டும் என்று கூறிய விடியோவை அசீமின் ட்விட்டர் பதிவின் கீழ் பதிவிட்டு கேலி செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Advertisement