அசீமை இப்படி பண்ண சொல்லி கேரவன்ல சொல்லி தான் அனுப்பிச்சாங்க – உளறிய ராபர்ட் மாஸ்டர்.

0
426
azeem
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி இருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மெட்டிஒலி நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன்,ரச்சித்தா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். தற்போது அசீம், விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா நந்தினி, அமுதவனான்,,Adk என்று 7 பேர் மட்டும் விளையாடி வருகின்றனர்.

-விளம்பரம்-

கடந்தவாரம் நடைபெற்ற நாமினேஷனில் விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா நந்தினி, அமுதவனான்,ரச்சிதா,Adk என்று 7 பேர் நாமினேஷ் ஆகி இருந்தனர். இதில் கடந்த வார நிகழ்ச்சியில் இறுதியில் ரட்சிதா வெளியேறி இருந்தார். அதே போல இந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்க் வென்ற அமுதவானனை தவிர மற்ற 6 பேரும் நாமினேட் ஆகி இருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் வெளியேறிய பல போட்டியாளர்கள் உள்ளே சென்ற வண்ணம் இருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் மணிகண்டன், தனலட்சிமி, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், ஜி பி முத்து, அசல் கோளாறு, நிவாஷினி, குயின்சி என சிலர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருந்தனர். பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பலரும் சக போட்டியாளர்களுடன் ஜாலியாக சில டாக்குகளை விளையாடி வருகின்றனர். மேலும், உள்ளே சென்றவர்கள் கொடுக்கும் டாஸ்கை தட்டாமல் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.

அந்த வகையில் அஸீமிற்கு லுங்கி மற்றும் பனியனுடன் மேக்கப் போடாமல் இருக்க வேண்டும் என்ற ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், தனக்கு கொடுக்கப்பட்ட உடை பிடிக்கவில்லை அதை மாற்றிக்கொடுக்குமாறு அசீம் அடிக்கடி பிக் பாஸிடன் முறையிட்டு வருகிறார். ஆனால், பிக் பாஸ் அதை கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறார். இவரை விட விக்ரமன் மற்றும் Adkக்கு கடுமையான டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

-விளம்பரம்-

இதில் விக்ரமன் ஒரு பக்கம் மீசை தாடியை எடுத்து இருக்கிறார். அதே போல Adk தனது தலையை மொட்டை அடித்து இருக்கிறார். ஆனால், அசீம் மட்டும் தன்னால் மேக் கப் போடாமல் இருக்க முடியாது என்று பாத் ரூம் சென்று அடிக்கடி மேக்கப் போட்டு வருகிறார். இதனால் மற்ற போட்டியாளர்கள் அஸீமிடம் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இருந்தும் அசீம் ‘நீங்கள் யாரும் என்னை கேட்கக்கூடாது பிக்பாஸ் என்னை கேட்கட்டும் என்று தொடர்ந்து டாஸ் கை மீறி வருகிறார்.

இப்படி ஒரு நிலையில் நேற்று நிகழ்ச்சியில் அசிம் மற்றும் ராபர்ட் மாஸ்டர் இருவருக்கும் இடையில் ஒரு மிகப்பெரிய வாக்குவாதம் நடந்தது. அஸ்வின் மறைவாக சென்று மேக்கப் போடுகிறார் என்று சொல்ல இதனால் கடுப்பான ஆசிம் மாஸ்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இப்படி ஒரு நிலையில் அஸீமை டீமாக சேர்ந்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று கேரணவனில் கூறி தான் அனுப்பினார்கள் என்று உளறி இருக்கிறார்.

Advertisement