விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் நிறைவடைந்தது 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் அசீம், விக்ரமன் சிவின் ஆகிய மூன்று பேர் தகுதி பெற்று இருந்தார்கள். இதில் அசீம் முதலிடத்தையும் அவரைத் தொடர்ந்து விக்ரமன் மற்றும் சிவின் ஆகிய இருவரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்து இருந்தார்கள். முதல் பட்டத்தை வென்ற அசிமிற்கு 50 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், அவருக்கு சிறப்பு பரிசாக ஒரு புதிய மாருதி கார் வழங்கப்பட்டு இருந்தது.
Azeem veetla abuse 😂😂
— Chitra (@chitrachitu2005) February 23, 2023
இந்த சீஸனில் விக்ரமன் தான் வெல்வார் என்று பலரும் எதிர்பார்த்துவந்தனர். இப்படி ஒரு நிலையில் அசீம் வென்றதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இந்த முடிவால் அதிருப்தி அடைந்து இருக்கின்றனர். அப்போ அடாவடியாக ஆடி, மற்றவர்களை இழிவுபடுத்தி விளையாடினால் பிக் பாஸில் வென்று விடலாமா என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும், விஜய் டிவிக்கு எதிராக Boycott விஜய் டிவி என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வரும் ரசிகர்கள் விக்ரமன் ஹேஷ் டேக்கையும் ட்ரெண்ட் செய்து வந்தனர்.
ஆனாலும் அடிக்கடி தன்னை தானே புகழ்ந்துகொள்ளும் வகையில் அசீம் அடிக்கடி ட்வீட் போட்டு வருகிறார். அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் விஜய் பாடல் வரிகளை போட்டு தன்னை தானே புகழ்ந்து அசீம் பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில் பல பேரின் முகமா நின்னு ஆடுற புலி தானே வெளயாட நெனச்சா உன் விதி முடிப்பானே சில பேரின் பெயர் தான் ஒரு ஆளுமை பெருமானே ஒரு வீரன் தடமே நீ காயம் வாங்குற எடமே என்று வாரிசு படத்தில் வரும் தீ தளபதி பாடல் வரிகளை போட்டு தனக்கு தானே Fire விட்டு கொண்டுஇருந்தார்.
Nanbargale ipo enna achu na
— Dharshana (@Dharsh_Caffeine) February 23, 2023
😂😂😂😂😂😂😂😂😂😂#biggbosstamil6 #biggbosstamil pic.twitter.com/trgT6SEXIz
அதே போல மக்கள் நாயகன் அசீம் என்று அடிக்கடி தன்னை தானே புகழ்ந்து ட்வீட் போட்டு வரும் அசீம் ‘எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்கு பிறப்பினும் அயலான் அயலானே’ என்று சைக்கிள் சூசை போல ஒரே வசனத்தை தான் பேசிக்கொண்டு வருகிறார். . இது ஒருபுறம் இருக்க பட்டம் வென்றதில் இருந்து பல இடங்களுக்கு கோப்பையுடன் செல்லும் அஸீமுடன் ரசிகர்கள் பலர் புகைப்படம் எடுக்கின்றனர்.
ஆனால், அசீம் எங்கு சென்றாலும் குறிப்பிட்ட அதே ஆட்கள் தான் அசீம் எங்கு சென்றாலும் இருக்கின்றனர். இதனை கண்டா நெட்டிசன்கள் எங்கு சென்றாலும் மாலை போட நபர்ககளையும் கூடவே கூட்டிக்கொண்டு சென்று விடுகிறீர்கலா என்று கேலி செய்து வருகின்றனர்.
Kadavul iruka kumaru #ClownAzeem #TotalWinnerVikraman#AramVellumLegalAid #VaathiVikraman#AramVellum #Vikraman pic.twitter.com/gKstuUZacE
— Adhi (@Adithya4858) February 22, 2023
இதனாலேயே இவரை தற்போது கலாய்த்து கொண்டு தான் வருகின்றனர். பிக் பாஸ் பட்டத்தை அசின் வென்றாலும் வென்றார் அடிக்கடி பல நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வருகிறார் சமீபத்தில் கூட சீமானின் பாராட்டு விழாவில் அசின் சென்றிருந்தார். இப்படி ஒரு நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஊ சொல்றியா ஊ ஊ சொல்றியா என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார்.
என்னடா இது இவனை வாழ்த்தி யாரும் Tweet போடவில்லை என்று இவனே இவனுக்கு புகழ் பாடி ஒரு கேவலமான tweet போடுறான் வெளியே வந்தும் திருந்தல போல பாவம் ஒரு நல்ல டாக்டரை பாக்கணும்
— Amutha Dhana (@DhanaAmutha) January 29, 2023
அப்போது மாகாபா ‘ராஜு ஜெயிச்சதும் அவருக்கு ராஜு ஊட்ல பார்ட்டி என்ற ஒரு நிகழ்ச்சி நடத்தினார்கள். இப்போது இவர் ஜெயித்திருக்கிறார், இவருக்கு அசீம் ஊட்ல ஆன்ட்டி நிகழ்ச்சியை ஆரம்பிக்கலாம் என்று மங்கமாக கலாய்த்து இருக்கிறார். அதேபோல இந்த நிகழ்ச்சிக்கு வந்தகுரேஷி நீ ஒரு அருமையான அயோக்கியன், விக்ரமோட fans meetக்கு கடைசி ரோல ஒக்காந்து விட்டு வந்தியாமே என்று பங்கமாக கலாய்த்து இருக்கிறார்