பிக் பாஸுக்கு பின்னரும் திருத்தலயா - சனமிடம் சொன்னதை சொல்லவே இல்லை என்று வாதாடும் பாலாஜி - ஜோ வெளியிட்ட முழு ஆடியோ.

By Rajkumar · 26/1/2021

விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் சர்ச்சை நாயகனாக வலம்வந்தவர் பாலாஜி. பாலாஜி பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை எக்கச்செக்க சர்ச்சைகளில் சிக்கினார். அதிலும் ஒரு எபிசோடில், பாலாஜி, சனம் ஷெட்டியை அட்ஜெஸ்ட்மண்ட் என்ற வார்த்தையை குறிப்பிட்டு அவதூறாக பேசி இருந்தார் என்று சர்ச்சை எழுந்தது. அதே போல ஆரியிடம் மரியாதை குறைவாக பேசியது, மைக்கை தூக்கி போட்டு உடைத்து என்று பல சர்ச்சைகளில் சிக்கிய பாலாஜி ரெட் கார்ட் கொடுத்து வெளியில் அனுப்ப வேண்டும் என்றும் சமூக வலைத்தளத்தில் பலர் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/RazzmatazzJoe/status/1353770316732932096

கடந்த 10ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் சனம் ஷெட்டி மற்றும் பாலாஜி முருகதாஸ் பேசிக்கொண்டிருக்கையில் பாலாஜி முருகதாஸ் நான் ஒரு மிஸ்டர் அண்ட் மிஸஸ் சவுத் இந்தியா என்ற பெயரில் pageant ஒன்றை நடத்தினேன் என்று கூறினார் அதற்கு சனம் செட்டி எப்போது என்று கேட்டதற்கு பாலாஜி முருகதாஸ் இது உங்களுடையது மாதிரி டுபாக்கூர் கிடையாது என்று கூறினார். உங்களுடைய நிகழ்ச்சிகளில் எல்லாம் யாரும் இன்டர்நேஷனல் லெவலுக்கு செல்ல முடியாது என்று பாலாஜி முருகதாஸ் கூறினார். அதற்கு சனம் செட்டி ஏன் முடியாது என்று கேட்டார்.

இதையும் பாருங்க : கார்த்திக்கை வரவேற்ற டிடி - வீடியோவை கண்டு புதிய சர்ச்சையை கிளப்பிய சின்மயி. என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

இந்த பிரச்சனை குறித்து பாலாஜி குறிப்பிட்ட அந்த beauty pageant நிறுவனத்தில் ஓனர் ஜோ மைக்கேல் பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார். அதில், பாலாஜி முருகதாஸ், பேசணும்னு பேசி இருக்கார். அவர் பேசியதற்கு அவர் பதில் சொல்லி ஆகணும் இல்லை மன்னிப்பு கேட்க வேண்டும். அவருக்கு எங்கள் சார்பில் ஒரு சட்ட நோட்டீஸ் எங்கள் வக்கீல் மூலமாக வழங்கப்படும். அவர் டுபாகூர் என்று சொல்லி இருக்கார். அவர் டுபாகூர் என்று சொன்ன அந்த நிறுவனம் அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட ஒரு pageant நிறுவனம். மேலும், பாலாஜி முருகதாஸ் பங்கேற்ற ஒரே தேசிய pageant என்றால் அது femina நடத்திய Mr.india pageant தான். அதில் கூட இவர் வின்னர் கிடையாது. இவர் பிக் பாஸில் பேசிய போது நான் ஒரு pageant  நிகழ்ச்சியை நடத்தினேன் என்று கூறி இருந்தார்.

https://www.youtube.com/watch?v=gMlRIYNlBUU&t=59s

மேலும், பாலாஜி மீது கண்டிப்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ஒன்று கூறி இருந்த ஜோ மைக்கேல் தற்போது அதனை செய்துள்ளார். அதாவது தன்னுடைய நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர் குறித்து தவறாக பேசியதோடு, தன்னுடைய நிறுவனம் ஒரு டுபாக்கூர் நிறுவனம் என்று கூறியது தனக்கு மன உளச்சலை ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் ஜோ மைக்கேல் பாலாஜி பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் நீதிமன்றத்தில் ஒரு கோடி கேட்டு பாலாஜி மீது வழக்கு தாக்கல் செய்ய போவதாக கூறி வக்கீல் நோட்டீசை அனுப்பியுள்ளார்.

இப்படி ஒரு நிலையில் பாலாஜிக்கு போன் செய்துள்ள ஜோ மைக்கேல் அதனை பதிவு செய்து ஆடியோவாக வெளியிட்டுள்ளார். ஆனால், அதில் கூட தான் சொன்னதை ஒப்புக்கொள்ளாமல் பிக் பாஸில் வாக்கு வாதம் செய்தது போல ஜோ மைக்கலிடமும் வாக்கு வாதம் செய்து வருகிறார். என்னதான் பாலாஜி எதையும் நேரடியாக கூறும் மனிதராக பிக் பாஸ் வீட்டில் இருந்தாலும், சொன்னதை சொல்லவே இல்லை என்று பல முறை வாதாடியது தான் அவருக்கும் கொஞ்சம் கெட்டப் பெயரையும் ஏற்படுத்தி கொடுத்தது. தற்போது அதேயே தான் மீண்டும் செய்து வருகிறார் என்று நெட்டிசன்கள் பலரும் கமன்ட் செய்து வருகின்றனர்.

behindtalkies AMP · Quick view
View full