கார்த்திக்கை வரவேற்ற டிடி – வீடியோவை கண்டு புதிய சர்ச்சையை கிளப்பிய சின்மயி. என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

0
124414
chinmayi
- Advertisement -

பிரபல பின்னணி பாடகர் கார்த்தி குறித்து சின்மயி போட்டுள்ள ட்விட்டர் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் தேசிய விருதுபெற்ற பாடலாசிரியர் வைரமுத்து மீது பிரபல பிண்ணனி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து #metoo என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தி பல்வேறு பெண்களும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை கூறி வரு வந்தனர். அதே போல பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பல பெண்களும் பாடகி சின்மயிக்கு தனிப்பட்ட முறையில் மேசேஜ்களை அனுப்புகின்றனர். அதனை சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

-விளம்பரம்-

Metoo விவகாரத்தால் சினமயியின் பெயர் பெரிதும் டேமேஜ் ஆனது. அதே போல வைரமுத்து மீது Metoo புகார் தெரிவித்ததால் டப்பிங் யூனியனில் இருந்து கூட நீக்கப்பட்டார் சின்மயி. பின்னர் பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர் மீண்டும் டப்பிங் யூனியனில் சேர்ந்தார். வைர முத்து மட்டுமல்லாமல், பிரபல பின்னணி பாடகரான கார்த்தி பற்றி கூட பல்வேறு சர்ச்சையான பதிவுகளை பதிவிட்டார் சின்மயி.

இதையும் பாருங்க : காசு வந்தா காக்கா கழுத கூட கலர் ஆகிடும் – கேலியான கமென்டிற்கு ஜூலி கொடுத்த நச் பதிலடி.

- Advertisement -

கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவர் பல பெண்களிடம் தவறான மெசேஜ் அனுப்புவது, தவறாக தொடுவது என மோசமாக நடந்துகொள்வார் என வெளிநாட்டு தமிழ் பாடகி கூறிய புகாரை சின்மயி வெளியிட்டார். இதுகுறித்து கார்த்தி விளமளிகையில் “எனக்கு தெரிந்து நான் யாரையும் அப்படி செய்யவில்லை. அப்படி இருந்தால் நான் மன்னிப்பு கேட்கிறேன் – சட்ட ரீதியாக நடவடிக்கையை எதிர்கொள்ளவும் தயார்” என்று கூறி இருந்தார்.இப்படி சின்மயி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினாலும், இது தொடர்பாக ஒரு தீர்வும் வரவில்லை.

இப்படி ஒரு நிலையில் கார்த்தி குறித்து மீண்டும் சர்ச்சையான பதிவு ஒன்றை போட்டுள்ளார் சின்மயி, சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் பிரம்மாண்ட துவக்கவிழாவில் கார்த்திக் கலந்து கொண்டு இருந்தார். அவரை ம க பா மற்றும் டிடி ஆகியோர் வரவேற்றார்கள். அப்போது கார்த்திக், டிடியை சாதாரணமாக அரவணைத்து இருந்தார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is nmkl.jpg
கார்த்தி குறித்து கடந்த ஆண்டு சின்மயி பதிவிட்ட கருத்து

இந்த ப்ரோமோவை பார்த்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சின்மயி, Metooவால் ஆண்களின் நற்பெயர் மற்றும் தொழில் கெட்டுவிட்டதா என்று கேலியாக குறிப்பிட்டுள்ள சின்மயி, இது ஆண்களின் உலகம், பாலியல் வாதிகளின் உலகம். அது வைரமுத்துவாக இருக்கட்டும், ராதாரவியாக இருக்கட்டும் வேறு யாராவது இருக்கட்டும். ஆண்களின் வாழ்க்கை பாழாகிவிட்டது என்று பெண்களுக்குத் தெரிவிப்பதை நிறுத்துங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement