யாஷிகா, பிக் பாஸ் வருவதற்கு முன்பே பாலாஜியுடன் டிவி நிகழ்ச்சியில் – ரசிகர்களை ஷாக்காக்கிய வீடியோ.

0
1870
balaji
- Advertisement -

விஜய் தொலைக்காட்சில் ஒளிபரப்பாகி வரும் பாலாஜி முருகதாஸ், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும் நடிகையுமான யாஷிகா ஆனந்துடன் இணைந்து விஜய் தொலைக்காட்சயில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகி உள்ள ‘கனக்ஷன்ஸ் ‘ நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டுள்ள வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது. அதாவது யாஷிகா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே இந்த நிகழ்ச்சியில் பாலாஜி முருகதாஸுடன் கலந்து கொண்டு இருப்பது தற்போது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பாலாஜி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் இவரும் யாஷிகாவும் ஒன்றாக எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.

-விளம்பரம்-

அதே போல ஏற்கனவே பாலாஜி முருகதாஸ் மற்றும் யாஷிகா பற்றி ஜோ மைக்கேல் பேட்டி ஒன்றில் ஷாக்கிங் தகவல் ஒன்றை சொன்னார். அதில் ‘பாலாஜி சொன்னார் தன்னுடைய பெற்றோர்கள் தன்னை சரியாக வரவில்லை என்று நாம் அவரை சரியாகத்தான் வளர்க்கவில்லை அப்படி ஒழுங்காக வளர்த்திருந்தால், கடந்த அக்டோபர் 6ஆம் தேதி 2019 ஆம் ஆண்டு நுங்கம்பாக்கத்தில், சங்கீதா ஹோட்டல் எதிரில் ஒரு ஸ்விக்கி டெலிவரி பாய்யை ஒரு கார் இடித்து இருக்காது , அந்த காரில் இருந்து குடித்துவிட்டு பாலாஜி ஓடிச்சென்று இருக்க மாட்டார்.

- Advertisement -

இந்த வழக்கு நுங்கம்பாக்கம் போக்குவரத்து காவல் துறையில் இன்னமும் இருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும், பேசிய ஜோ மைக்கேல். யாஷிகா மற்றும் பாலாஜி இருவரும் நண்பர்கள் தான் இந்த கார் விபத்து நடந்தபோது நான் வெளியூரில் இருந்தேன். யாஷிகா குடித்துவிட்டு கார் விபத்தை ஏற்படுத்தி விட்டார் என்று செய்தியை நான் தொலைக்காட்சியில் பார்த்த உடன் யாஷிகாவை தொடர்பு கொள்ள முயன்றேன். அப்போது யாசிக்காவின் நண்பரை தொடர்பு கொண்டு இது குறித்து விசாரித்தேன்.

அப்போது அவர் என்னிடம் சொன்னது யாஷிகா அந்த காரில் இல்லை முடித்துவிட்டு நாங்கள் தனியாக போய்விட்டோம் எங்கள் கூட வந்த பாலாஜியும் அவரது நண்பரும் வேறு ஒரு காரில் போய் மோதி விட்டார்கள். அப்போது பாலாஜி எங்களுக்கு கால் செய்து நாங்கள் விபத்தை செய்துவிட்டோம் எங்களுக்கு உதவி வேண்டும் என்று அழைக்கும் போது தான் நாங்கள் அங்கே வந்தோம். ஆனால் அங்கே இருந்த மீடியாகாரர்கள் எங்களை பார்த்ததும் நாங்கள் தான் விபத்தை ஏற்படுத்தியதாக நினைத்து விட்டார்கள் என்று என்னிடம் கூறியதாக ஜோ மைக்கேல் கூறி இருந்தார் ஜோ மைக்கேல்.

-விளம்பரம்-
Advertisement