தந்தையின் இறுதி சடங்கில் கதறி அழுத பாலாஜி – வைரலாகும் உருக்கமான வீடியோ.

0
854
balaji
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா, சோம் சேகர் என்று 18 பேர் இந்த சீசனில் கலந்து கொண்டனர். இந்த சீசன் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

-விளம்பரம்-

பிக் பாஸ் வீட்டில் இந்த சீசனில் கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸ் ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாளராக தான் இருந்தார். அதிலும் ஒரு எபிசோடில், பாலாஜி, சனம் ஷெட்டியை அட்ஜெஸ்ட்மண்ட் என்ற வார்த்தையை குறிப்பிட்டு அவதூறாக பேசி இருந்தார் என்று சர்ச்சை எழுந்தது. அதே போல ஆரியிடம் மரியாதை குறைவாக பேசியது, மைக்கை தூக்கி போட்டு உடைத்து என்று பல சர்ச்சைகளில் சிக்கிய பாலாஜி ரெட் கார்ட் கொடுத்து வெளியில் அனுப்ப வேண்டும் என்றும் சமூக வலைத்தளத்தில் பலர் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் பாலாஜியின் தந்தை உடல் நலக் குறைவால் காலமாகியுள்ளார். தந்தையின் இறுதி சடங்கில் பாலாஜி கண்ணீரோடு இருக்கும் வீடியோ ஒன்றும் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், தந்தையின் இறப்பை தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பாலாஜி ‘இதுவும் கடந்து போகும்’ என்று பதிவிட்டுள்ளார். சமீபத்தில் தான் அனிதாவின் தந்தை காலமாகி இருந்தார். அதே போல கடந்த ஆண்டு பிக் பாஸ் போட்டியாளர்களான முகேன் மற்றும் லாஸ்லியாவின் தந்தை காலமாகி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலாஜியின் தந்தை இறப்பிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ஆரி, பாலாஜியின் தந்தை குறித்து உருக்கமான ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில், பாலாஜி முருகதாஸின் தந்தையின் மறைவைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். இந்த கடினமான தருணங்களில் குடும்பத்திற்கு பலமும் தைரியமும் பெறட்டும் என்று பதிவிட்டுள்ளார். மேலும், சுரேஷ் சக்கரவர்த்தியும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement