பச்சையாக பொய்யை சொல்லி ஷிவானியை காப்பற்றிய பாலா – குறும்படம் போட்டு வச்சி செய்யும் ரசிகர்கள்.

0
43745
bala

பிக் பாஸ் வீட்டில் கடந்த சில வரமாகவே குரூப்பீசம் பற்றி பஞ்சாயத்து தான் ஓடிக்கொண்டு இருக்கிறது. தற்போது பிக் பாஸ் வீட்டில் அர்ச்சனா, ரியோ, சோம், ஜித்தன் ரமேஷ், கேப்ரில்லா ஆகியோர் ஒரு குரூப்பாகவும் பாலாஜி, ஆஜீத், சம்யுக்தா, ஷிவானி ஆகியோர் ஒரு குரூப்பாகவும் இருந்து வருகின்றனர். இதில் அர்ச்சனா குரூப்பை வேல் குரூப் என்று அவர்களே சொன்னார்கள். இந்த குரூப்பில் அர்ச்சனா தான் தலைவராக இருந்து வருகிறார். அவர் ஆட்டி வைப்பது போலத் தான் மற்றவர்கள் ஆடுகிறர்கள் என்று பலரும் கூறி வருகின்றனர்.

அதனை உறுதி செய்யும் விதமாக ஒரு சம்பவம் நடைபெற்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்று முன் தின நிகழ்ச்சியில் கால் சென்டர் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. இதில் கால் சென்டரில் இருக்கும் நபர்களுக்கு வீட்டில் உள்ள யார் வேண்டுமானலும் போன் செய்து என்ன வேண்டுமானாலும் கேட்கலாம் என்று கூறப்பட்டு இருந்தது. இதில் முதல் அழைப்பாக பாலாஜிக்கு அர்ச்சனா கால் செய்து இருந்தார். மேலும், அர்ச்சனா கேட்ட கேள்விக்கு பாலாஜி பொறுமையாக பதில் கூறியதால் அர்ச்சனா அடுத்த வாரம் நாமினேட் ஆனார்.

- Advertisement -

இந்த டாஸ்க்கிற்கு பின்னர் ரியோ மற்றும் பாலாஜிக்கு ஒரு வாக்கு வாதம் ஏற்பட்டது. அதாவது ரியோ ஆஜித்திடம் நான் தான் கால் செய்ய போகிறேன் என்று சொன்னது தவறு என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் பாலா கால் செய்ய போவது அர்ச்சனா என்று ஷிவானி சொன்னதாக ஒரு பிரச்சனை எழுந்தது. அப்போது சனம் ஷெட்டி பாலாவிடம் உங்களுக்கு அர்ச்சனா தான் கால் செய்ய போகிறார் என்று ஷிவானி சொல்லவில்லையா என்று கேட்ட போது ஷிவானி சொல்லவில்லை என்று கூறி இருந்தார். ஆனால், உண்மையில் ஷிவானி, பாலாவிடம் அர்ச்சனா தான் உங்களுக்கு கால் செய்ய போகிறார் என்று கூறியதை தற்போது நெட்டிசன்கள் குறும்படம் ஒன்றை போட்டுள்ளனர்.

நேற்று இந்த வாரம் முழுவதும் சுவாரசியம் குறைவாக செயல்பட்ட இரண்டு போட்டியாளர்களை தேர்வு செய்தபோது பாலா ரியோவை தேர்வு செய்தார். அவர் அதற்காக கூறிய காரணம் ரியோ, ஆஜித்திடம் தான் கால் செய்யப்போகிறார் என்று கூறியிருந்தார். ஒருவேளை எனக்கும் அர்ச்சனா தான் கால் செய்ய போகிறார் என்று தெரிந்து இருந்தால் அதற்கு ஏற்றார் போல நான் என்னை தயார்படுத்திக் கொண்டு இருப்பேன். யார் யாருக்கு கால் செய்யப்போகிறார்கள் என்பதை வெளியில் செல்லக் கூடாது என்ற விதியை மீறிவிட்டார் இதனால் ரியோவை இந்த வாரம் வாரம் குறைவான போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பாலாஜி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

அவ்வளவு ஏன் உண்மையில் பாலாஜியை காப்பாற்ற அர்ச்சனா ஏற்கனவே திட்டம் தீட்டி இருக்கிறார் என்பது Unseen வீடியோவில் வெளிச்சமாகி இருக்கிறது. அதில் இந்த டாஸ்க்கிற்கு முன்பாக அர்ச்சனா, சம்யுக்தா, நிஷா ஆகிய மூவரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.அப்போது சம்யுக்தா, யார் முதலில் கால் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்துவிடீர்களா என்று கேட்கிறார். அதற்கு நான் முதலில் செல்கிறேன் என்று கூறுகிறார். அதற்கான காரணத்தை சொன்ன அர்ச்சனா, பாலாவிற்காகஆரி, கண்டிப்பாக வருவார். அப்படி நடந்தால் பாலாஜி கண்டிப்பாக தோற்றுவிடுவான். அதனால் பாலாவிடம் நான் பேசுகிறேன். நான் நாமினேட் ஆனாலும் பரவாயில்லை பாலாஜி வெல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

Advertisement