மணிக்கூண்டு டாஸ்கில் அதி புத்திசலித்தனமாக ஆடுவதாக நினைத்த பாலாஜி – ஆப்பு வைத்த பிக் பாஸ்.

0
1130
bala
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் மணிக் கூண்டு டாஸ்க் இன்று கொடுக்கப்பட்டு இருந்தது. இதில் போட்டியாளர்கள் குழுவிற்கு 3 நபர்களாக பிரிந்து 5 குழுக்களாக விளையாடினார்கள். தொடர்ந்து 45 மணி நேரம் இரவு பகல், காத்து மழை என்று பாராமல் இந்த டாஸ்கில் பாலாஜியை தவிர மற்ற போட்டியாளர்கள் அனைவரும் இந்த டாஸ்கை சீரியஸாக மேற்கொண்டனர். இந்த டாஸ்கில் கடிகாரமாக செயல்படும் அணி 3 மணி நேரத்தை கணக்கிட்டு கூற வேண்டும் என்பது தான் விதி.

-விளம்பரம்-

இதில் ஒவ்வொரு அணியும் 3 முறை கடிகார டாஸ்கை செய்தனர். இதில் மற்ற அணிகள் சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருந்தனர். ஆனால், நேற்று காலை, பாலாஜி மற்றும் அவரது அணிக்கு கடிகார டாஸ்க் வரும் போது பாலாஜி தூங்கி கொண்டு இருந்தார். அவரது அணியினர் சென்று எழுப்பியும் அவர் இந்த டாஸ்கில் தாமதமாக தான் வந்தார். பாலாஜி தன்னுடைய தாமதத்தை பூர்த்தி செய்ய இரண்டாம் கடிகார டாஸ்கை வேகமாக செய்து வெறும் 1 மணி 26 நிமிடத்திலேயே முடித்துவிட்டு நான் நேரத்தை அட்ஜஸ்ட் செய்ய தான் அப்படி செய்தேன் என்று சப்பை கட்டு கட்டி இருந்தார்.

- Advertisement -

பாலாஜியின் இந்த செயலால் பலரும் கடுப்பானார்கள். இப்படி ஒரு நிலையில் இன்றைய முதல் ப்ரோமோவில் இந்த டாஸ்க்கான முடிவுகள் வந்தது. ஆனால், பாலாஜி நினைத்தது போல அல்லாமல், ஒவ்வொரு 3 மணி நேரத்தை கணிக்க அணிகள் எடுத்துக்கொண்ட நேரத்தை கணக்கிட்டார் பிக் பாஸ். அதாவது 3 மணி நேரத்தை கணிக்க அதிக நேரம் எடுத்துக்கொண்டாலும் குறைந்த நேரத்தை எடுத்துக்கொண்டாலும் இரண்டையும் கணக்கு செய்து அதை கூட்டி தான் இந்த டாஸ்க் முடிவு அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த டாஸ்கில் பாலாஜி அணி ஒட்டு மொத்தமாக 3 மணி நேரம் 4 நிமிடம் எடுத்துக்கொண்டு கடைசி இடத்திற்கு வந்துள்ளது.

கடந்த சில வாரமாகவே பாலாஜியால் லக்சரி பட்ஜெட் டாஸ்க் மிகவும் மோசமாக சென்று கொண்டு இருக்கிறது. அதுவும் கடந்த வாரம் நடைபெற்ற பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க்கில் பாலாஜி செய்த அதி புத்திசாலி தனத்தால் ஒட்டுமொத்த லக்ஸரி பட்ஜெட்டும் திவாலானது. இதனால் ஏற்கனவே பாலாஜி மீது போட்டியாளர்கள் செம கடுப்பில் ஆழ்ந்தார்கள். ஆனால், இந்த வாரம் பாலாஜி செய்த அதி புத்திசாலித்தனத்தால் லக்ஸரி பட்ஜெட்டை விட அடுத்த வாரம் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பை தான் இழந்ததோடு மட்டுமல்லாது ரம்யா மற்றும் சுசித்ராவின் தலைவர் போட்டிக்கான கணவையும் தும்சம் செய்துள்ளார் பாலாஜி

-விளம்பரம்-
Advertisement