ஷிவானி வீட்டில் கொண்டாட்டம், வீட்டிற்கு சென்றுள்ள பாலாஜி – ஷிவானி அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் இதோ.

0
11457
balaji
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா, சோம் சேகர் என்று 18 பேர் இந்த சீசனில் கலந்து கொண்டனர். இந்த சீசன் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

-விளம்பரம்-

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் கண்டிப்பாக ஒரு காதல் கதை இடம் பெற்றுவிடும் முதல் சீசனில் ஓவியா -ஆரவ் இரண்டாவது சீசனில் மகத் மற்றும் யாஷிகா மூன்றாவது சீஸனில் அபிராமி – முகேன், கவின்- லாஸ்லியா, தர்ஷன்- ஷெரின் என்று பல காதல் கதைகள் ஓடியது. அதே போல தான் இந்த சீசன் ஆரம்பத்தில் பாலாஜி மற்றும் கேபி இருவருக்கும் காதல் இருப்பது போல காண்பிக்கப்பட்டது. ஆனால், அது எதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை. மேலும், ஷிவானி – பாலா காதல் கதையும் ஒர்க் அவுட் ஆகவில்லை.

இதையும் பாருங்க : என்னது, குஷ்பூ குழந்தை நட்சத்திரமாக நடிச்சிருக்காங்களா ? அவரே வெளியிட்ட புகைப்படம்.

- Advertisement -

அதிலும் ஷிவானி அம்மா பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளே வந்தே போது ஷிவானிக்கு அவர் விட்ட டோஸை பார்த்து இனிமேல் ஷிவானி, பாலாஜி பக்கம் தலைவைத்து கூட படுக்க மாட்டார் என்று தான் பலரும் நினைத்தார்கள். ஆனால், அதன் பின்னரும் பாலாஜியிடம் சகஜமாக தான் பேசி வந்தார் ஷிவானி. அவ்வளவு ஏன், சமீபத்தில் காதலர் தினத்தின் போது பாலா, ஷிவானி, சம்யுக்தா, ஆஜீத், ரம்யா, கேப்ரில்லா ஆகிய 6 பேரும் நேற்று காதலர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடினர்.

இப்படி ஒரு நிலையில் ஷிவானி, தனது நாய் குட்டிக்கு பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். இந்த கொண்டாட்டத்தில் பாலாஜி, சம்யுக்தா, ஆஜீத் ஆகியோரும் கலந்துகொண்டு இருக்கின்றனர். ஷிவானி அம்மாவுடன் இவர்கள் எடுத்துக்கொண்ட அந்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதை பார்க்கும் போது ஷிவானி அம்மா ஷிவானியை திட்டியது எல்லாம் சும்மாவா என்று பலரும் புலம்பி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement