கையில் சர்ப் போர்ட, Transparent உடையில் கடற்கரையில் பிந்து மாதவி கொடுத்த போஸ்.

0
1743
Bindhu-Madavi
- Advertisement -

‘கல்யாணி’ டீச்சர் என்ற கதாபாத்திரத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை பிந்து மாதவி. தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகைகளில் பிந்து மாதவியும் ஒருவர். ஆந்திரப் பிரதேசத்திலுள்ள மதனப்பள்ளியில் பிறந்தவர் பிந்து மாதவி. இவர் தமிழில் பொக்கிஷம் என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானவர். இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு தமிழை விட தெலுங்கில் தான் மார்க்கெட் அதிகம் என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

இவர் தமிழில் வெப்பம், கழுகு, சட்டம் ஒரு இருட்டறை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்,ஜாக்சன் துறை, பசங்க-2 போன்ற பல படங்களில் நடித்து உள்ளார். ஜாக்சன் துறை படத்திற்கு பிறகு நடிகை பிந்து மாதவிக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனால் இவர் கமலஹாசன் தொகுத்து வழங்க பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் வயல்காடு சுற்று மூலம் உள்ளே நுழைந்தார்.

- Advertisement -

இதன் மூலமாக இவர் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார் என்று சொல்லலாம். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவியும் என்று பார்த்தால் எதிர்பார்த்த அளவிற்கு படவாய்ப்புகள் அமையவில்லை. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘கழுகு 2 ‘ திரைப்படமும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஓடவில்லை.

தற்போது அம்மணி மாயன், யாருக்கும் அஞ்சேல், பகைவனுக்கு அருள்வாய் போன்ற படங்களில் நடித்து வருகிறார். பகைவனுக்கு அருள்வாய் படத்தில் இவர் சசி குமாரின் ஜோடியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது நீர்ச்சருக்கு விளையாட்டில் ஈடுபடுகிறார் நடிகை பிந்து மாதவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீர்ச்சருக்கு விளையாட்டு வகுப்புக்கு சென்று வருவதாக புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் ட்ரான்ஸ்பெரன்ட் உடையில் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

-விளம்பரம்-
Advertisement