போன வாரம் பாலாஜியை போல இந்த வாரம் லக்ஸரி பட்ஜெட்டை காலி செய்த ஷிவானி.

0
755
shivani
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் இதுவரை 6 வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது இதுவரை ரேகா வேல்முருகன் சுரேஷ் சக்கரவர்த்தி என்று 3 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் பிக் பாஸ் வீட்டில் இன்னும் 15 போட்டியாளர்கள் மீதம் இருக்கிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் மணிக் கூண்டு டாஸ்க் இன்று கொடுக்கப்பட்டு இருந்தது. இதில் போட்டியாளர்கள் குழுவிற்கு 3 நபர்களாக பிரிந்து 5 குழுக்களாக விளையாடினார்கள். இதில் சனம் செட்டி, நிஷா, அனிதா ஆகிய மூவர் ஒரு குழுவாகவும் ரியோ கேப்ரில்லா ஆரி ஆகிய 3 பேரும் ஒரு குழுவாகவும். அர்ச்சனா, சம்யுக்தா, சோம் சேகர் ஆகிய 3 பேரும் ஒரு குழுவாகவும் ஷிவானி அஜித் ரமேஷ் ஆகிய 3 பேரும் ஒரு குழுவாகவும்.

-விளம்பரம்-

பாலா அனிதா சுசித்ரா ஆகிய 3 பேரும் ஒரு குழுவாகவும் தனித்தனி குழுக்களாக பிரிந்து விளையாடி வந்தார்கள். தொடர்ந்து 45 மணி நேரம் இரவு பகல், காத்து மழை என்று பாராமல் இந்த டாஸ்கில் பாலாஜியை தவிர மற்ற போட்டியாளர்கள் அனைவரும் இந்த டாஸ்கை சீரியஸாக மேற்கொண்டனர். இந்த டாஸ்கில் கடிகாரமாக செயல்படும் அணி 3 மணி நேரத்தை கணக்கிட்டு கூற வேண்டும் என்பது தான் விதி. இதில் ஒவ்வொரு அணியும் 3 முறை கடிகார டாஸ்கை செய்தனர்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இன்றைய முதல் ப்ரோமோவில் இந்த டாஸ்க்கான முடிவுகள் வந்தது.ஆனால், பாலாஜி நினைத்தது போல அல்லாமல், ஒவ்வொரு 3 மணி நேரத்தை கணிக்க அணிகள் எடுத்துக்கொண்ட நேரத்தை கணக்கிட்டார் பிக் பாஸ். அதாவது 3 மணி நேரத்தை கணிக்க அதிக நேரம் எடுத்துக்கொண்டாலும் குறைந்த நேரத்தை எடுத்துக்கொண்டாலும் இரண்டையும் கணக்கு செய்து அதை கூட்டி தான் இந்த டாஸ்க் முடிவு அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த டாஸ்கில் பாலாஜி அணி ஒட்டு மொத்தமாக 3 மணி நேரம் 4 நிமிடம் எடுத்துக்கொண்டு கடைசி இடத்திற்கு வந்துள்ளது.

இந்த டாஸ்கை குறைவான நேரத்தில் முடித்து அர்ச்சனா, சம்யுக்தா, சோம் சேகர், சிவானி, ஆஜித், ரமேஷ் ஆகிய 6 பேரும் அடுத்த வார தலைவர் போட்டியில் பங்கேற்க இருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் போட்டியாளர் அனைவருக்கும் தனித்தனியாக புள்ளிகள் குடுக்கப்ட்டு லக்ஸரி பட்ஜட் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில், ஷிவானி கொடுக்கப்பட்ட புள்ளிகளுக்கு அதிகமாக ஷாப்பிங் செய்ததால் அவரது லக்ஸரி பட்ஜட் ரத்து செய்யப்பட்டது.

-விளம்பரம்-
Advertisement