யார் சூப்பர் ஸ்டார் ? நிருபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சேரன். வைரலாகும் வீடியோ இதோ.

0
1576
Cheran
- Advertisement -

யார் சூப்பர் ஸ்டார் என்பது முக்கியமில்லை என்று சேரன் கோபமாக அளித்து இருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 80 கால கட்டத்தில் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் ஜொலித்து கொண்டு இருப்பவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. ஆனால், கடந்த சில காலங்களாக ரஜினி நடிப்பில் வந்த எந்த படமும் அந்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

-விளம்பரம்-

கடைசியாக ரஜினி நடித்த படம் அண்ணாத்த. அண்ணன்-தங்கை பாச கதையை மையாக கொண்ட படம். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் வெளியாகி மோசமான விமர்சனங்களை பெற்று ரசிகர்கள் மத்தியில் படு தோல்வி அடைந்தது. இதை அடுத்து ரஜினி தற்போது “ஜெயிலர்” என்ற படத்தில் நடித்து இருக்கிறார். தற்போது சோசியல் மீடியா முழுவதும் ரஜினி நடித்த ஜெயிலர் படம் குறித்து தான் ட்ரெண்டிங் ஆக சென்று கொண்டு இருக்கிறது.

- Advertisement -

ஜெயிலர் படம்:

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். இவர்களுடன் படத்தில் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் கிங்ஸ்லி, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள்.

படத்தின் பாடல்கள்:

இதனால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த படம் இந்த மாதம் பத்தாம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் வெளியாகி ட்ரெண்டிங் ஆகி இருக்கிறது. அதிலும் இந்த படத்தின் இரண்டாவது, மூன்றாவது பாடல் எல்லாம் முழுக்க முழுக்க ரஜினிக்காக உருவாக்கப்பட்ட பாடலாக இருக்கிறது. இந்த பாடல் வரிகள் மறைமுகமாக விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-

அதோடு தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று கூறுகிறார்கள். இதனை அடுத்து சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சோசியல் மீடியாவில் விஜய் குறித்து பரவிய வதந்திக்கும், குட்டி ஸ்டோரி குறித்தும் மாஸாக பேசியிருந்தார். இதனால் விஜய் ரசிகர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் இடையே சோசியல் மீடியாவில் பனிப்போர் நடந்திருக்கிறது. இதில் யார் காக்கா, யார் கழுகு என்றெல்லாம் விவாதிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

சேரன் அளித்த பேட்டி:

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து சேரன் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு சேரன் இடம் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர், நான் தமிழ்நாட்டிலேயே இல்லை. இதை சொல்வதற்கு நான் யார்? நான் இவர்கள் இரண்டு பேரையும் வைத்து படம் பண்ணவில்லை. நான் அவர்களுடைய ரசிகன் தான். எனக்கு என்னுடைய பொழப்பு தான் முக்கியம். யார் சூப்பர் ஸ்டார் என்பது எனக்கு முக்கியமில்லை என்று கூறியிருக்கிறார்.

Advertisement