சொந்த மகளயே பிரிச்சிட்டாரு.! லாஸ்லியாவையா சேத்து வைப்பாறு சேரன்.! வைரலாகும் வீடியோ.!

0
53607
Cheran-Daughter
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் லாஸ்லியா மற்றும் கவினின் காதல் கதை தான் நீண்ட நாட்களாக ஓடிவந்தது. ஆனால், லாஸ்லியாவை மகளாக பாவித்து வரும் சேரன், கவினை எப்படியாவது லாஸ்லியாவிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்று போராடி வந்தார். அதற்கு ஏற்றார் போல கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற லாஸ்லியாவின் குடும்பத்தினரும் காதல் கத்திரிக்காய் எல்லாம் வேண்டாம் ஒழுங்காக கேம் விளையாடு என்று அறிவுறுத்துவிட்டு வந்தனர்.

-விளம்பரம்-
Image result for cheran damini chandru

லாஸ்லாலியா மற்றும் கவினின் காதலை பிரித்தது சேரன் தான் என்று லாஸ்லியா மற்றும் கவின் ஆர்மி புலம்பி வருகிறது. இதனால் சேரன் காதலுக்கு எதிரானவர் என்று பலரும் புலம்பி வந்தனர். பிரபல இயக்குனரான வசந்தபாலன் கூட லாஸ்லியா கவின் ஒன்றாக சேர்ந்தால் என்ன தவறு என்று ஒரு நீளமான பதிவை தனது முகநூலில் பதிவிட்டிருந்தார்.

- Advertisement -

இதையும் பாருங்க : நெடுஞ்சாலை நடிகையா இது.! இப்போ எப்படி இருகாங்க என்ன பன்றாங்க பாருங்க.!

சேரனுக்கு செல்வராணி என்ற மனைவியும், நிவேதா மற்றும் தாமினி என்று இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சேரனின் இளைய மகள் தாமினி சூளைமேட்டை சேர்ந்த டான்சர் சந்துருவை இயக்குநர் காதலித்தார். ஆனால், இவர்கள் காதலுக்கு சேரன் சம்மதிக்காததால் சேரன் மீது தாமினி போலீசில் புகார் அளித்திருந்தார். இதனால் சேரனை போலீசார் விசாரித்தனர்.

-விளம்பரம்-

ஆனால், சந்துருவின் நடவடிக்கைகள் சரியல்ல என்பதால் மகளின் காதலை மறுப்பதாக சேரன் அறிவித்தார். ஆனால், சந்துருவுடன்தான் வாழ்வேன் என்று தாமினி பிடிவாதமாக இருந்தார். இந்த காதல் பிரச்சினை காரணமாக நீதிமன்ற உத்தரவுப்படி 2 வாரங்களுக்கு மேல் குடும்பத்தினரை பிரிந்து தலைமை ஆசிரியர் வீட்டில் தாமினி வைக்கப்பட்டிருந்தார்.

பின்னர் மனம் மாறிய தாமினி, சேரனுடன் செல்வதாகக்கூறி சென்றார். தனது மகள் விவகாரத்தில் சேரன் மிகவும் நொந்து போனார். அதற்க்கு முன்னர் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்த சேரன் இந்த பிரச்னையில் சேரன் மீண்டு வர மிகவும் சிரமப்பட்டார். பின்னர் எப்படியோ மகளை மூளை சலவை செய்து காதலனிடம் இருந்து பிரித்துவந்தார் சேரன்.

தனது காதலி தன்னை பிரிந்ததால் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அந்த சமயத்தில் கண்ணீர் மல்க பேட்டியளித்தார் தாமினியின் காதலன் சந்துரு. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரளாக பரவி வர, சொந்த மகளின் காதலை ஏற்காத சேரனா தற்போது பிக் பாஸ் வீட்டில் மகளை போல பாவித்து வரும் லாஸ்லியாவின் காதலை ஏற்கபோகிறார் என்று நெட்டிசன்கள் கமன்ட் அடித்து வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement