வெளியேற்றபட்டார் சேரன்.! அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட கமல்.!

0
4880
Cheran

பிக் பாஸ் நிகழ்ச்சி 76 நாட்களை நெருங்கியுள்ளது. இறுதிப் போட்டிக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் போட்டிகள் இன்னும் கடுமையாக மாறவில்லை. இன்னமும் பிக் பாஸ் வீட்டில் காதல் பஞ்சாயத்து தான் ஓடிக்கொண்டு இருக்கிறது. எனவே, வரும் வாரங்களிலாவது போட்டியாளர்களுக்கு சுவாரசியமானடாஸ்குகள் கொடுக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Bigg Boss Tamil

#Day77 #Promo3 #பிக்பாஸ் இல் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #KamalHaasan

Vijay Television ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಭಾನುವಾರ, ಸೆಪ್ಟೆಂಬರ್ 8, 2019

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டை சச்சரவிற்கு சற்றும் சளைக்காத நபராக இருந்து வருகிறார் வனிதா. அதனால் தான் என்னவோ மக்கள் இவரை ஓட்டு போட்டு வெளியே அனுப்பிய பின்னரும் இவரை மீண்டும் வயல்கார்டு போட்டியாளராக பிக்பாஸ் அழைத்து வந்துள்ளார். மேலும், இவரை மீண்டும் அழைத்து வந்ததற்கு பிரயோஜனமாக பிக்பாஸ் வீட்டில் இவர் சென்ற நாள் முதலே பல்வேறு சண்டைகளையும் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறார். இதனால் அடிக்கடி கமலிடம் நோஸ்கட் வாங்கி வருகிறார்.

இதையும் பாருங்க : தமிழ் சினிமாவின் அக்கா தம்பி பிரபலங்களான தேவயானி, நகுல் ஆகியோரின் தாயார் காலமானார்.!

- Advertisement -

இது ஒரு புறம் இருக்க இந்த வாரம் முகென், லாஸ்லியா, கவின், சேரன், ஷெரின் ஆகியோர் நாமினேஷனில் இடம்பெற்றனர். மேலும், இந்த வாரம் சேரன் வெளியேற்ற பட்டதாகவும் அவர் ரகசிய அறையில் வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் சேரன் வெளியேற்றபட்டது உறுதியாகியுள்ளது

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

-விளம்பரம்-
Advertisement