தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகர்களில் முரளியும் ஒருவர். சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக கொடிகட்டிப் பறந்தவர் நடிகர் முரளி. நடிகர் முரளி அவர்கள் கர்நாடகாவை பூர்விகமாகக் கொண்டவர். முரளியின் தந்தை கன்னட சினிமாவின் பிரபல இயக்குனர் ஆவார். கன்னடப் படங்களின் மூலம் தான் முரளி சினிமா உலகில் அறிமுகம் ஆனார். அதற்கு பிறகு பூ விலங்கு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் என்ட்ரி கொடுத்தார். அதனை தொடர்ந்து இவர் புதுவசந்தம், இதயம், அதர்மம், பொற்காலம், தினந்தோறும் உள்ளிட்ட ஏராளமான ஹிட் படங்களில் நடித்து உள்ளார்.

தன்னுடைய மகன் அதர்வா நடித்த பானா காத்தாடி படத்தில் கூட முரளி அவர்கள் ஒரு கெஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதுவே அவருடைய கடைசி படம். நடிகர் முரளி அவர்கள் 2010 ஆம் ஆண்டு திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் அடைந்தார். முரளி இறக்கும்போது அவருடைய வயது 46 தான். இவருடைய மரணம் தமிழ் திரை உலகையே உலுக்கியது. இந்நிலையில் நேற்று நடிகர் முரளியின் பிறந்தநாள் தந்தையின் பிறந்தாள் அன்று அதர்வா அவர்கள் உருக்கமான வாழ்த்து தெரிவித்திருந்தார்.

Advertisement

அதில் அதர்வா தன் தந்தை முரளியுடன் தான் இருக்கும் குழந்த பருவத்து புகைப்படத்தை பதிவிட்டு, நான் அறிந்த மிக அமைதியான மற்றும் உறுதியான நபர் எனது தந்தை தான். பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா. நாங்கள் உங்களை ரொம்ப நேசிக்கிறேன். தினமும் உங்களை மிஸ் பண்ணுகிறேன் என்று பதிவிட்டு உள்ளார். அவரது பதிவை பார்த்த ரசிகர்கள் தந்தையை பிரிந்து தவிக்கும் அதர்வாவுக்கு ஆறுதல் கூறியதுடன், முரளிக்கு பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.

பிறகு இயக்குநர் சேரன் தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை போட்டு உள்ளார். அதில் அவர் கூறி இருப்பது, நாங்கள் உங்களை மிஸ் பண்றோம் சார். பிறந்த நாள் வாழ்த்துகள் மை டியர் சார். உங்க சிரிப்பும், உங்க அன்பும் ரொம்ப மிஸ் பண்றோம் சார் என்று கூறி உங்களுடைய பாஸ். என்று குறிப்பிட்டுள்ளார். இயக்குநர் சேரனை முரளி பாஸ் பாஸ் என்று தான் அழைப்பார் என்றும் தெரிவித்துள்ளார். மறைந்த நடிகர் முரளி, சேரன் இயக்கத்தில் மூன்று படங்களில் நடித்துள்ளார். தேசிய கீதம், பொற்காலம் மற்றும் வெற்றி கொடிக்கட்டு படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement