காதில் headset-வுடன் ரகசிய அறையில் சேரன்.! வெளியான இன்றைய எபிசோடின் சூப்பர் அப்டேட்.!

0
16054
Cheran

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வெற்றிகரமாக 76 நாட்களை கடந்துள்ளது . இறுதிப் போட்டிக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் போட்டிகள் இன்னும் கடுமையாக மாறவில்லை. இன்னமும் பிக் பாஸ் வீட்டில் காதல் பஞ்சாயத்து தான் ஓடிக்கொண்டு இருக்கிறது. எனவே, வரும் வாரங்களிலாவது போட்டியாளர்களுக்கு சுவாரசியமான டாஸ்குகள் கொடுக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Image result for Bigg Boss Cheran evicted

இது ஒரு புறம் இருக்க இந்த வாரம் முகென், லாஸ்லியா, கவின், சேரன், ஷெரின் ஆகியோர் நாமினேஷனில் இடம்பெற்றனர். மேலும், இந்த வாரம் சேரன் வெளியேற்ற பட்டதாகவும் அவர் ரகசிய அறையில் வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே போல இன்றைய நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ் பற்றிய அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இன்றைய நிகழ்ச்சியில் கமல் இந்த வாரம் நடைபெற்ற தலையணைகள் தரத்தை சரிபார்த்த அணிகளைப் பற்றி பேசியுள்ளார். மேலும், முதலில் முகென் மற்றும் ஷெரின் காப்பாற்றப்பட்டதை அறிவித்த கமல் அதன் பின்னர் கவின் மற்றும் லாஸ்லியா காப்பாற்றபட்டதாக அறிவித்துள்ளார். எனவே, சேரன் வெளியேற்றப்பட்டதால் வனிதா மற்றும் லாஸ்லியா கண்ணீர் விட்டு அழுது உள்ளனர்.

மேலும், சேரனை ரகசிய அறைக்குள் அனுப்பப்படுவதாக பிக் பாஸ் சேரிடம் இரகசியமாக கூறுகிறார். மேலும், சேரன் ரகசிய அறையில் காதில் ஹெட்போன் அணிந்தவாறு அமர்ந்து கொண்டு இருக்கிறார். மேலும், ரகசிய அறையில் சிவப்பு, நீலம், பச்சை நிற விளக்குகள் இருக்கிறது. இதுவே இன்றைய நிகழ்ச்சியின் ஹைலைட் என்று நமக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement