கடைசில சேரனும் பெண்களிடம் புறம் பேச ஆரம்பிச்சிட்டாரா.! இந்தாங்க அவருக்கு ஒரு குறும்படம்.!

0
6202
CHeran

நேற்றய நிகழ்ச்சியில் சிறையில் இருந்த அபிராமி, தன்னால் உடம்பிற்கு முடியவில்லை அதனால் என்னை வெளியில் அனுப்புங்கள் என்று பிக் பாஸிடம் கேட்டு கொண்டிருந்தார். இதனால் இந்த வார தலைவராக இருந்த சாண்டி, சிறை கதவை பிக் பாஸ் அனுமதியின்றி திறக்க போனார். ஆனால், சேரன் அதற்கு அனுமதிக்கவில்லை.

அதன் பின்னர் வனிதா சிறையை திறந்ததும் அபிராமியின் ஜெயில் தண்டனை முடிந்துவிட்டது என்று அறிவித்தார் பிக் பாஸ். சாண்டி சிறையை திறக்கப்போகும் போது சேரன் வேண்டாம் என்று சொன்னதால் சேரன் மீது கொஞ்சம் கடுப்பில் இருந்தார் சாண்டி. அதுபோக கடந்த சில நாட்களாக சேரன் பெண்கள் பக்கம் பேசி வருவதால், தர்ஷன், கவின், முகென், சாண்டி ஆகியோரும் சேரன் மீது கொஞ்சம் காண்டில் தான் இருக்கின்றனர்.

இதையும் பாருங்க : வெளியில் சென்றதும் சாண்டி குடும்பத்தை சந்தித்த சித்தப்பு.! இதான்டா நட்பு.! வைரலாகும் புகைப்படம்.! 

- Advertisement -

இந்த நிலையில் இந்த சிறை மேட்டர் குறித்து சாண்டி, கவின் தர்ஷன் ஆகியோர் சேரன் பேசியதை குறித்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று வந்த சேரன் தர்ஷன் சார் கொஞ்சம் வாங்க என்று அழைத்து சென்றுவிட்டார் .அதன் பின்னர் லிவிங் ஏரியாவில் சாண்டி குரூப் பேசியது குறித்து பெண்களிடம் விளக்கிக்கொண்டிருந்தார் சேரன்.

அப்போது பேசிய சேரன், எதோ விடுதலை வாங்கி கொடுத்தது போல பேசிக்கொண்டு இருக்காங்க. நாங்க சொல்லி தான் குருநாதர் (பிக் பாஸ்) கேட்டுட்டாரு என்றெல்லாம் நினைக்கிறாங்க. ஆனால், நாம தான் அவங்கள தடுத்துட்டோமாம். அதனலா அவங்க உள்ள ஒக்காந்து பேசிட்டு இருக்காங்க அந்த கொசுக்களை எல்லாம் நசுக்கனு சொல்ராங்க என்று சேரன் கூறியுள்ளார்.

-விளம்பரம்-

ஆனால், இந்த குறும்பட வீடியோவில் சாண்டி மற்றும் கவின் அப்படி பேசியது போல தெரியவில்லை. இதனால் சேரன் பொய் சொல்கிறாரா, இல்லை கவின் மற்றும் சாண்டி சொன்னதை ஒளிபரப்பவில்லையா என்பது தான் தெரியவில்லை. இருப்பினும் சேரன் இப்படி புறம் பேசுவதை பார்க்கும் போது தான் ஆச்சர்யமாக இருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement