துணியின்றி நடிகை நடித்த காட்சி மூலம் படத்திற்கு ப்ரோமோஷன் தேடும் சேரனுக்கு வாழ்த்து சொன்ன ரசிகர். சேரனின் பதில பாருங்க.

0
90145
cheran
- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக களமிறங்கியவர் சேரன். இயக்குனராக பல வெற்றிப்படங்களை கொடுத்த சேரன் ஹீரோவாக ஒரு சில படங்களில் மட்டுமே ஜெயிக்க முடிந்தது. மேலும், தொடர்ந்து தோல்வி படங்களால் இடையில் சிறிது காலம் சினிமாவில் பிரேக் எடுத்துக்கொண்டார். இந்த நிலையில் சில காலங்களுக்கு பிறகு சேரன் அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் கலந்து கொண்டு மக்களிடையே அதிகமாக பேசப்பட்டு வந்தார்.

-விளம்பரம்-

பொதுவாகவே பிக்பாஸ் வீட்டில் வயதில் அதிகம் உள்ளவர்கள் கலந்து கொண்டால் 50 நாட்களுக்குள்ளேயே எலிமினேட் செய்யப்படுவார்கள். ஆனால், சேரனின் விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் தான் 90 நாட்கள் வரை பயணம் செய்ய காரணமாக இருந்தது என்று கூட கூறலாம். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சேரன் ஒரு நல்ல மனிதர் என்ற பெயரை ரசிகர்கள் மத்தியில் எடுத்தார்.மேலும், சேரன் ஒரு அப்பாவாக, நண்பராக, அண்ணனாகவும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் விளங்கினார்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சேரன், ராஜாவுக்கு செக் என்ற படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஹீரோவாக களமிங்கியுள்ளார். இந்த படத்தில் சேரனுக்கு ஜோடியாக சராயூ மோகன் நடித்து உள்ளார். இவர்களை தவிர இந்த படத்தில் கனா காணும் காலங்கள் இர்பான் நடித்துள்ளார். மேலும்,படத்தில் முக்கிய வேடத்தில் சிருஷ்டி டாங்கே, வர்மா ஆகியோர் நடித்து உள்ளார்கள். அதிலும் இந்த படத்தில் நடிகை சிருஷ்டி ஒரு காட்சியில் அரை நிர்வாணமாக நடித்துள்ளார். சமீபத்தில் அது குறித்து பேட்டி ஒன்றில் கூட பேசி இருந்தார் சிருஷ்டி.

இந்த நிலையில் நடிகர் சேரன், இந்த படத்தில் நடிகை சிருஷ்டி அரை நிர்வாண காட்சியில் நடித்தது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், ராஜாவுக்கு செக் படத்தில் ஒரு காட்சியில் ஸ்ருஷ்டி டாங்கே காட்சியின் முக்கியத்துவம் கருதி துணியின்றி நடித்திருப்பார். ஒரு டவல் மட்டுமே மேலே கிடக்கும். அந்த காட்சியில் நடிக்க ஒரு தைரியம் வேணும். இப்படத்தில் அவர் கொடுத்த ஒத்துழைப்பு மறக்கமுடியாதது. மிக்க நன்றி சிருஷ்டி. என்று பதிவிட்டிருந்தார்.

-விளம்பரம்-

வீடியோவில் 6:48 நிமிடத்திற்கு பின் பார்க்கவும்

சேரனின் இந்த டீவீட்டை பார்த்த ரசிகர் ஒருவர், நிர்வாண காட்சியை ஹைலைட் செய்து படத்தை புரமோஷன் செய்யும் ராஜாவுக்கு செக் படக்குழுவிற்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டு சேரன் மற்றும் சிருஷ்டியை டேக் செய்து இருந்தார் . அதற்கு பதில் அளித்த சேரன், ஒரு ஆர்டிஸ்ட் அப்படி ஒரு காட்சி நடிச்சிருக்காங்க.. அவங்களுக்கு அதுக்கான மரியாதை கெளரவம் கொடுக்கத்தான் அதைப்பற்றி பேசுறாங்க. அதை வச்சு பப்ளிசிட்டி பண்ணனும்னா முதல்லயே பண்ணிருக்கமாட்டமா. நாங்க எந்த இண்டர்வியூலயும் அதப்பத்தி பேசல. பொதுவான குற்றச்சாட்டுகளை தவிர்த்திடுங்கள் என்று பதில் அளித்துள்ளார்.

Advertisement