விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருந்த ‘800’ படத்தின் மோஷன் போஸ்டரை தொடர்ந்து இந்த படத்திற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ளது. இப்படி ஒரு நிலையில் இந்த படம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் இயக்குனர் சேரன், தமிழ் சினிமா உலகில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் சேரனும் ஒருவர். சேரன் அவர்கள் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் ஆட்டோகிராப், சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், ராமன் தேடிய சீதை, யுத்தம் செய் உள்ளிட்ட பல படங்களை இயக்கியும், நடித்தும் உள்ளார். சேரன் அவர்கள் பல படங்களுக்காக தேசிய விருதுகளை வாங்கி உள்ளார்.

சேரன் அவர்கள் ராஜாவுக்கு செக் என்ற படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஹீரோவாக நடித்து அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து சேரன், விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்கப்பபோவதாக கூட தகவல்கள் வெளியானது. சொல்லப்போனால் பல ஆண்டுகளாக சினிமாவில் பிரேக் எடுத்துக்கொண்ட சேரனை நடிகர் விஜய் சேதுபதி தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார் என்று சேரனே கூறியிருந்தார்.

Advertisement

இப்படி ஒரு நிலையில் விஜய் சேதுபதி நடிக்க உள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தை விஜய் சேதுபதி புறக்கணிக்க வேண்டும் என்று சேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சேரன் விஜய் சேதுபதி உலகம் முழுவதுமிருந்து தமிழர்களின் வேண்டுகோள் 800 வேண்டாம் என. உங்களை வாழவைத்த மக்களைவிட, உணர்வை விட, தமிழ் ஈழ மக்களின் உயிர்போன கொடும் நிகழ்வை விட இந்தப்படம் பெரிதல்ல சகோதரா.. விட்டுவிடுங்கள். உங்களின் நடிப்புத்தீனிக்கு ஆயிரம் கதாபாத்திரங்கள் காத்திருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை போன்ற படங்களை எடுத்த இயக்குனர் சீனு ராமசாமி கூட இந்த படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலக வேண்டும் என்று ட்வீட் செய்து இருந்தார். அதில். விஜய் சேதுபதியின் இதயம் உலகத்தமிழர்கள். விஜய் சேதுபதி நடிக்கும் `யாதும் ஊரே யாவரும் கேளீர்’ திரைப்படம் அதற்கு சான்று. ஈழத்தமிழர் உள்ளத்திற்கு அருமருந்து. உள்ளங்கைக்கு முத்தம். மக்கள் செல்வா… நீரே எங்கள் தமிழ் சொத்து அய்யா நமக்கெதற்கு மாத்தையா? மாற்றய்யா?” என்று பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement