சேரனை பற்றி பேசிய லாஸ்லியா.! ரகசிய அறையில் இருந்து கவனிக்கும் சேரன்.!

0
37527
Cheran

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போதுதான் கொஞ்சம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது இந்த சீசன் முடிய இன்னும் 3 வாரங்களுக்கு குறைவான காலமே உள்ள நிலையில் தற்போது தான் ரகசிய அறையை பயன்படுத்தியுள்ளார் பிக்பாஸ் இந்த ரகசிய அறைக்குள் நேற்று பிக்பாஸில் இருந்து வெளியேறியதாக அறிவிக்கப்பட்டிருந்த சேரன் அனுப்பப்பட்டுள்ளார்.

இவர் இன்னும் ஒரு சில தினங்களுக்கு ரகசிய அறைக்குள் அமர்ந்தபடி போட்டியாளர்களை கண்காணித்துக் கொண்டே இருப்பார். மேலும், இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் freeze டாஸ்க் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒருவேளை லாஸ்லியாவின் தந்தை பிக் பாஸ் வீட்டுக்குள் வரவில்லை என்றால் அவருக்கு பதிலாக உள்ளே சென்று லாஸ்லியாவிற்கு அதிர்ச்சி கொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அதேபோல பொதுவாக வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தலைவர் பதவிக்கான டாஸ்க் நடைபெறும் ஆனால் கடந்த வாரம் அதுபோன்ற டாஸ்க் எதுவும் நடைபெறவில்லை எனவே இன்று இந்த வார தலைவர் பதவிக்கான டாஸ்க் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் இன்று லாஸ்லியா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மேலும் இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற இருக்கிறது ஏற்கனவே ரகசிய அறைக்குள் அனுப்பப்பட்டுள்ளது இந்த வார நாமினேஷன் மிகவும் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அதனால் இந்த வாரம் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லாஸ்லியாவிற்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் ஆகவே அமைந்துள்ளது என்று கருதப்படுகிறது

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement