போர்வைக்குள் முத்தமிடும் ஜோடி – எல்லை மீறி செல்லும் பிக் பாஸ் 6 போட்டியாளர்கள். வைரலாகும் வீடியோ.

0
801
Biggboss
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் போர்வைக்குள் முத்தமிட்டிருக்கும் ஜோடி குறித்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி வருகிறது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. இந்தியில் தான் இந்த நிகழ்ச்சி முதன்முதலாக ஒளிபரப்பப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து பிற மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

தமிழில் விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி இரண்டு வாரங்களை கடந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6:

பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருக்கிறார். இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது. இதனால் போட்டியாளர்கள் ஓவ்வொருவரும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட ஜிபி முத்து தாமாகவே வெளியேறி இருந்தார். இவரை தொடர்ந்து கடந்த இரண்டாவது வாரத்திற்கான எவிக்சன் நடந்தது.

தமிழ் பிக் பாஸ்:

அதில் மெட்டிஒலி சாந்தி வெளியேறி இருந்தார். வழக்கம் போல் மூன்றாவது வாரம் தொடங்கி பிக் பாஸ் டாஸ்கை கொடுத்து நிகழ்ச்சி கலவரமாக சென்று கொண்டு இருக்கிறது. தமிழைப் போல தெலுங்கிலும் பிக்பாஸ் சீசன் 6 சென்று கொண்டு இருக்கிறது. நாகர்ஜுனா தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதியே துவங்கிவிட்டது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.

-விளம்பரம்-

தெலுங்கு பிக் பாஸ்:

இதுவரை இந்த நிகழ்ச்சியில் ஏழு பேர் வெளியேறி இருக்கிறார்கள். தற்போது 14 பேர் பிக் பாஸ் வீட்டில் விளையாடி வருகிறார்கள். இந்நிலையில் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வரலாகி வருகிறது. அதாவது, இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக மெரினா மற்றும் ரோகித் தம்பதிகள் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

போர்வைக்குள் முத்தம் கொடுத்த ஜோடி:

தற்போது இவர்கள் இருவரும் போர்வைக்குள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து இருக்கிறார்கள். இவர்கள் இப்படி செய்வதை சக போட்டியாளர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தும் இருக்கிறார்கள். தற்போது இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து பலரும் கன்னடம் தெரிவித்து வருகின்றனர். இதற்கு பிக் பாஸ் தரப்பிலிருந்து என்ன சொல்ல போகிறார்கள்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement