பல இளம் பெண்களுக்கு தொல்லை - டேனி பற்றி ஆதரங்களை வெளியிட்ட நபர். சின்மயி போட்ட ட்வீட்.

By Rajkumar · 18/4/2021

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் என்றும் சர்ச்சைக்கு பஞ்சமே இருந்தது இல்லை. அதிலும் ஜூலி, மீரா மிதுன், சுஜித்ரா போன்றவர்கள் பிக் பாஸ்ஸுக்கு பின்னரும் பல சர்ச்சைகளில் சிக்கினர். இப்படி ஒரு நிலையில் முதன் முறையாக சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகரும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான டேனியல். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்குபெற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் டேனி. ஆனால், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னதாகவே பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். இவர் முதன் முதலாக தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் அறிமுகமானார்.

https://twitter.com/chettyrajubhai/status/1383018437987823618

அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்து இருந்தார். அதிலும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு என்ற கதாபாத்திரத்தில் இவர் பேசிய 'பிரெண்டு லவ் மேட்டரு' என்ற வசனத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தார். அதன் பின்னர் இவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பும்.

இதையும் பாருங்க : கிரிக்கெட் விளையாட தெரிஞ்ச ஒரு நடிகை நான் தான் - மிதாலியுடன் மகளீர் அணியில் ஆடிய கிரிக்கெட்டர் நடிகையான கதை.

பல ஆண்டுகளாக டெனிஷாவை காதலித்து வரும் டேனி வெளியே சென்றதும் அவரை திருமணம் செய்துகொள்வேன் என்றும், தனது திருமணத்தை கமல் முன் நின்று நடத்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.டேனி கூறியது போலவே வெளியே சென்றதும் தனது நீண்ட வ்ருட காதலியான டெனிஷாவை திருமணம்செய்துகொண்டார். 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் தேதி தனது காதலி டெனிஷாவை பதிவு திருமணம் செய்து கொண்ட டேனிக்கு கடந்த ஆண்டு தான் குழந்தை பிறந்தது.

வீடீயோவை காண இங்கே கிளிக் செய்யவும்

பிக் பாஸுக்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வரும் இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பெண் ஒருவருடன் பேசிய ஸ்க்ரீன் ஷாட் ஆதாரங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  “Thonuchu Solliton” என்ற கணக்கில் இருந்து டேனியல் 17 வயது பள்ளி வயது பெண்ணுடன் மோசமாக பேசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ' நான் அந்த பெண்ணின் விவரங்களைச் சேர்க்கவில்லை. டேனியல் போப் இரவு நேர பல பெண்கள் டி.எம்-கிற்கு மெசேஜ் செய்து அவர்களின் படங்களைக் கேட்கிறார்.

அவள் 17 வயது பள்ளி பெண் (அவள் புத்திசாலி. அவன் கேட்டபோது அவளுடைய விவரங்கள் எதுவும் அவனுக்குக் கொடுக்கவில்லை) இந்த டேனியல் போப் ஒரு குழந்தையுடன் திருமணமான நபர் . அவர் தனது படங்களை இரண்டு முறை மற்றும் அதுவும் அதிகாலை 2 மணிக்கு அனுப்பும்படி கேட்டுள்ளார். அவர் எவ்வளவு காலமாக இதைச் செய்கிறார் என்று தெரியவில்லை' என்று அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

இப்படி ஒரு நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சின்னத்திரை நடிகைகள் ப்ரோமோஷன் என்ற பெயரில் செய்த பித்தலாட்டங்களை தோலுரித்த நபர் தற்போது டேனியின் லீலைகள் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதே போல பிரபல பாடகியான சின்மயியும் டேனியின் விவகாரம் குறித்து பதிவிட்டுள்ளார். ஆனால், இந்த விவகாரம் குறித்து டேனி இன்னும் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

behindtalkies AMP · Quick view
View full