கிரிக்கெட் விளையாட தெரிஞ்ச ஒரு நடிகை நான் தான் – மிதாலியுடன் மகளீர் அணியில் ஆடிய கிரிக்கெட்டர் நடிகையான கதை.

0
1239
karnan

சினிமாவில் நடித்த நடிகர் நடிகைகளை விட குறும்படங்கள் நடத்த பல்வேறு நடிகர் நடிகைகள் சமூகவலைதளத்தில் விரைவில் பிரபலம் அடைந்து விடுகிறார்கள். அந்தவகையில் தமிழில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான லட்சுமி குறும்படத்தில் நடித்து ஒரே நாளில் சமூகவலைதளத்தில் மிகவும் பிரபலம் அடைந்தவர் நடிகை லட்சுமி பிரியா சந்திரமௌலி. இந்த குறும்படத்திற்கு பல்வேறு எதிர்ப்புகளும் கிளம்பியது. ஆனால், அணைத்து எதிர்ப்பையும் மீறி இந்த குறும்படம் மிகவும் வைரலானது.

Girls got our back!

இந்த குறும்படத்தை மிகவும் புரட்சிகரமான படம் என்று கூறினாலும், ஒரு சிலரோ பெண்கள் சமுதாயத்தை இழிவு படுத்துவது போல இந்த குறும்படம் இருக்கிறது என்று குற்றம் சாட்டி இருந்தார். அதேபோல இந்த குறும்படத்தில் பயன்படுத்தப்பட்ட பாரதியாரின் பாடலுக்கு பல்வேறு எதிர்ப்புகளும் கிளம்பியது. கடும் விமர்சனங்கள் வரும் என தெரிந்தே எடுக்கப்பட்ட இந்த குறும்படத்தில் நடித்த லட்சுமிக்கு பல்வேறு தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்புகளும் விமர்சனங்களும் வந்தன.

- Advertisement -

ஆனால், இவருக்கு பேரும் புகழும் ஏற்படுத்தி கொடுத்தது கர்ணன் திரைப்படம் தான். கர்ணன் திரைப்படத்தில் பத்மினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் லட்சுமி. நடிகையாக மட்டுமல்லாமல், கார்ப்பரேட் கம்பெனி, தியேட்டர் ஆர்டிஸ்ட், சினிமா நடிகை என லட்சுமி ப்ரியா சந்திரமெளலிக்கு பல திறமைகளை கொண்ட இவர், ஒரு கிரிக்கெட் வீராங்கனையும் கூட. ஆம், இவர் இந்திய மகளீர் கிரிக்கெட் அணியில் ஆடியிருக்கிறாராம்.

இதுகுறித்து பேசியுள்ள அவர், `இந்தியா `பி’ டீமுக்காக மிதாலி ராஜ் தலைமையில வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரா விளையாடியிருக்கேன். அதன் பின்னர் என்னுடைய வாழ்க்கை மாறிவிட்டது. கிரிக்கெட் விளையாடவில்லை என்றாலும் தொடர்ந்து கிரிக்கெட் பார்த்து வருவதாக கூறியுள்ள லட்சுமி பிரியா, இந்திய மகளீர் அணியின் உலக கோப்பை தொடர் குறித்தும் பிங்கர் டிப்பில் விவரங்களை தெரிந்து வைத்திருக்கிறார். மேலும், இந்திய மகளீர் கிரிக்கெட் அணியின் மிதாலி  குறித்து பேசுகையில், செம கூல். அவங்களுக்குள்ளயும் பதற்றம் இருக்கும். ஆனா, அதை வெளிக்காட்டிக்க மாட்டாங்க என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement