இந்த ரெண்டு பேருக்கு கொஞ்சம் கூட சுயபுத்தி இல்ல.! வெளியே வந்த டேனி அதிரடி பேட்டி..!

0
691
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மஹத் வெளியேறிய அடுத்த வாரம் எலிமினேட் ஆனவர் டேனி. ஆரம்பத்தில் இவருக்கு நல்ல பெயர் இருந்தாலும் இடையில் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவுடன் சற்று நெருக்கமாக இருந்து ஆளுக்கு ஏற்றார் போல நடந்து கொண்டதால் மக்கள் மத்தியில் சற்று வெறுப்பை சம்பாதித்தார்.

-விளம்பரம்-

Danie

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்து முதல் வேலையாக தனது நீண்ட வருட காதலியான டெனிஷாவை திருமணம் செய்து கொண்டார் டேனி. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின் பல பேட்டிகளிலும் பங்கேற்று வருகிறார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற டேனி பிக் பாஸ் போட்டியாளர்கள் குறித்து பல விடயங்களை பகிர்ந்து கொண்டார். பேட்டியின் நடுவே போட்டியாளர்களை பற்றி சில கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளது அப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போட்டியாளர்களிலேயே யாருக்கு ஐ க்யூ(IQ) அதாவது யாருக்கு சுத்தமாக சுயபுத்தி இல்லாமல் இருக்கிறார்கள் என்று கேக்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

Aishwarya

அதற்கு பதிலளித்துள்ள டேனி கண்டிப்பா ஐஸ்வர்யா மற்றும் பாலாஜிக்கு தான் ஐ க்யூ(IQ) என்பது சுத்தமாக இல்லை இவங்க ரெண்டு பேருக்கு தான் ஐ க்யூ(IQ) என்பது சுத்தமாக இல்லை என்று சிரித்தபடியே கூறியுள்ளார். மேலும், வீட்டில் ரித்விகாவிற்கும் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ரம்யாவிற்கு தான் அதிகப்படியான ஐ க்யூ(IQ) இருக்கிறது என்றும் இவர்கள் இருவரும் எப்போதும் தெளிவாக யோசித்து முடிவெடுக்க கூடியவர்கள் என்றும் கூறியுள்ளார் டேனி.

Advertisement