பிக் பாஸ் வீட்டில் 76 நாட்கள் இருந்து தனலட்சுமி பெற்ற சம்பளம் எவ்ளோ தெரியுமா ? இத்தனை லட்சமா ?

0
384
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று தனலட்சுமி வெளியேற்றப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது அவரது சம்பள விவரம் வெளியாகி இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது முதலே 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளராக வெளியேறி வருகின்றனர்.கடந்த வாரம் வரை மொத்தம் 9 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த நிலையில் நிலையில் வெளியேறப்போகும் அந்த போட்டியாளர் யார் என்பதை அறிய ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருந்தது.

-விளம்பரம்-

கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனின் அமுதவாணன் மற்றும் Adkவை தவிர அசீம், விக்ரமன், ஷிவின், மைனா நந்தினி, தனலட்சுமி, ரச்சித்தா, கதிரவன் ஆகிய 7 பேர் நாமிநெட் ஆகி இருந்தனர். இதில் கதிர், ரச்சிதா அல்லது மைனா நந்தினி தான் வெளியேறுவார்கள் என்று பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்யும் வகையில் தனலட்சுமி வெளியேறி இருந்தார்.

- Advertisement -

இந்த சீசனில் ஒரு சாதாரண பெண்ணாக அறிமுகமான தனலட்சுமி டிக் டாக் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தனலட்சுமி. சிறுவயதிலேயே நடிப்பதில் ஆர்வம் கொண்ட இவர் சில படங்களிலும், பறை இசை ஆல்பத்திலும் நடித்து இருக்கிறார். இவர் பிக் பாஸில் கலந்துகொண்ட முதல் நாளில் இருந்தே பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பையும் சம்பாதித்தார்.

தனலட்சுமி என்னதான் வெறுப்பை சம்பதித்தாலும் அவர் இந்த வாரம் எலிமினேட் ஆகி இருப்பதை பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் பிக் பாஸ் வீட்டில் ஒன்றுமே செய்யாமல் இருக்கும் கதிர், ரச்சிதா, எப்போதும் புறம் பேசிக்கொண்டு இருக்கும் Adk, காமெடி என்ற பெயரில் ரசிகர்கள் மத்தியில் Cringe பெயரை எடுத்த மைனா போன்றவர்கள் எல்லாம் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது தனலட்சுமி வெளியேறியது தான் ஆச்சரியமே.

-விளம்பரம்-

என்னதான் தனலட்சுமி அடிக்கடி வாயை விட்டு சர்ச்சையில் சிக்கினாலும், டாஸ்க்கிலும் சரி கண்டன்ட் கொடுத்ததில் சரி, தனலட்சுமி மேலே குறிப்பிட்ட போட்டியாளர்களை விட பல படி மேல் தான். இடையில் பல வாரங்கள் தனலட்சுமி தன்னை வீட்டிற்கு அனுப்புங்கள் என் அம்மாவை பார்க்க வேண்டும் என்று கூறி இருந்தார். ஆனால், கடந்த வாரம் Freeze டாஸ்க் வரை மட்டும் பிக் பாஸ் வீட்டில் இருந்தால் போதும் என்று தனலட்சுமி ஆசைப்பட்ட நிலையில் அவர் வெளியேற்றப்பட்டது தான் சோகம்.

பிக் பாஸ் சீசனில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் அவரவர் பிரபலத்திற்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும். அந்த வகையில் இந்த சீசனில் ஒரு சாதாரண பெண்ணாகவும் டிக் டாக் பிரபலமாகவும் உள்ளே நுழைந்த தனலட்சுமிக்கு நாள் ஒன்றுக்கு 11 முதல் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டதாம். அதை வைத்து பார்க்கும் போது பிக் பாஸ் வீட்டில் 76 நாட்கள் இருந்து மொத்தமாக 11 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வரை அவருக்கு சம்பளமாக கிடைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement