வீட்டை விட்டு வெளியேறிய பிக் பாஸ் தனலட்சுமி – அவர் அம்மா அனுப்பிய லீகல் நோட்டீஸ்.

0
271
- Advertisement -

பிக் பாஸ் தனலட்சுமியை அவருடைய அம்மா வீட்டை விட்டு வெளியேற்றி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா முழுவதும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மிகப் பிரபலமாக திகழ்வது பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி முதன்முதலில் ஹிந்தியில் தான் ஒளிபரப்பப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

மேலும், தமிழில் இந்த நிகழ்ச்சி இதுவரை 7 சீசன்களை கடந்திருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பல பேருக்கு வெள்ளி திரையில் வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. நிறைய பேர் சினிமாவில் நுழையத் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். அந்த வகையில் பிக் பாஸின் மூலம் எப்படியாவது சினிமாவில் நுழைந்து விட வேண்டும் என்று பல கனவுகளுடன் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் தான் தனலட்சுமி.

- Advertisement -

தனலட்சுமி குறித்த தகவல்:

டிக் டாக் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தனலட்சுமி. இவருக்கு சிறுவயதிலேயே நடிப்பதில் ஆர்வம் கொண்டவர். இதனால் இவர் சில படங்களிலும், பறை இசை ஆல்பத்திலும் நடித்து இருக்கிறார். அதோடு இவர் நிறைய ரீல்ஸ் வீடியோக்களை எல்லாம் வெளியிட்டு இருக்கிறார். இதனால் இவர் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். அதன் பின் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனலட்சுமி:

இவர் பிக் பாஸில் கலந்துகொண்ட முதல் நாளில் இருந்தே பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். இருந்தாலும், தனலட்சுமி பக்கம் நியாயம் இருக்கிறது என்று கமலும், மக்களும் அவருக்கு ஆதரவு கொடுத்திருந்தார்கள். வழக்கம் போல் தனலட்சுமி ஒவ்வொரு டாஸ்கிலும் எல்லா போட்டியாளர்களிடையுமே சர்ச்சையில் சிக்கியிருந்தார். பின் இவர் நிகழ்ச்சியின் இறுதி வரை சென்று இருந்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் அசீம் முதலிடத்தையும், அவரைத் தொடர்ந்து விக்ரமன் மற்றும் சிவின் ஆகிய இருவரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

நிகழ்ச்சிக்கு பின் தனலட்சுமி:

மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் தனலட்சுமி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகும் இவர் சோசியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக இருக்கிறார். இவரை லட்சக்கணக்கான நபர்கள் பாலோ செய்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தனலட்சுமி அவர்கள் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறார். இவர் கடந்த ஆண்டு புது கார் ஒன்றை வாங்கி இருந்தார். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்தார்.

தனலட்சுமி பதிவு:

அப்படி எதுவும் வரவில்லை. இந்த நிலையில் பிக் பாஸ் தனலட்சுமிக்கு அவருடைய அம்மா லீகல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில் அவர், தன்னுடைய பெயரை பயன்படுத்தக் கூடாது. வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். இதை தனலட்சுமி சோசியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார். ஆனால், இருவருக்கும் என்ன பிரச்சனை என்று குறிப்பிடவில்லை. இதை பார்த்து நெட்டிசன்கள், உங்களை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டாரா? ஏன்? எதற்கு? என்றெல்லாம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Advertisement