ப்ரோமோ பொறுக்கி என்று கூறியதும் செருப்பை கழட்ட முயன்ற விஷ்ணு – 10 நிமிடம் நீண்ட சண்டை. இதோ முழு வீடியோ.

0
431
Vishnu
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தினேஷ் மற்றும் விஷ்ணுவிற்கு மிகப்பெரிய சண்டை வெடித்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 42 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

முதல் நாளில் இருந்தே நிகழ்ச்சி அனல் பறந்து கொண்டு இருக்கிறது. அதேபோல் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். பின் யாரும் எதிர்பாரா வகையில் பிரதீப்புக்கு Red Card கொடுத்து வெளியேற்றப்பட்டார். பிரதீப் வெளியேற்றப்பட்டது தான் கடந்த ஒரு வாரமாக ஹாட் டாப்பிக்காக இருந்தது.

- Advertisement -

பிரதீப் வெளியேறியதால் மாயா & கோ இனி நமக்கு யாரும் போட்டி இல்லை என்று கொஞ்சம் ஆணவத்தில் இருந்தனர். ஆனால், wild card போட்டியாளராக சென்ற தினேஷ், சென்ற முதல் நாளில் இருந்தே மாயா & கோவை கிழித்தெடுத்து வருகிறார். அதே போல ஆரம்பத்தில் மாயா குழுவில் இருந்த விஷ்ணு தற்போது அவர்களுடன் சேருவதை குறைத்துவிட்டார். இதனால் விஷ்ணுவிற்கு யாரிடமும் பிரச்சனை இல்லாமல் வந்தது.

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் வீட்டில் இன்று டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டு இருந்தது. அதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களைப் போலவே நடந்து கொள்ள வேண்டும். இந்த டாஸ்க்கில் இந்த வார கேப்டனான தினேஷ் பங்கு பெறவில்லை. மாறாக பிக் பாஸ் அவரை தனியாக அழைத்து அவருக்கு சீக்ரெட் டாஸ்க் ஒன்றை கொடுத்திருந்தார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இந்த டாஸ்க்கில் அனைவரும் பெரிதாக பங்கேற்கவில்லை என்று தினேஷ் பேசிக் கொண்டிருந்தார். அப்போது விஷ்ணு இவருக்கு ஏதாவது ஒரு கேரக்டரை கொடுங்கள் என்று கூறியிருந்தார். இதனால் தினேஷ் உங்கள் கேரக்டரை நீங்கள் ஒழுங்காக செய்யுங்கள் என்று சாதாரணமாக கூறினார்.ஆனால், விஷ்ணு அவரை வாயா போயா என்று பேச ஆரம்பித்தார் சத்தம்போட்டார்.

பின்னர் இவர்கள் இருவருக்கும் இப்படியே வாக்குவாதம் நீண்டு கொண்டு செல்ல விஷ்ணு, தினேஷை நரி என்று கூற தினேஷ் பதிலுக்கு விஷ்ணுவை அமுல் பேபி என்றும் கூறியிருந்தார். மேலும், என்னிடம் வந்து ப்ரோமோ கன்டென்ட் ரெடி செய்யாதே என்று கூறிய தினேஷ் விஷ்ணுவை கன்டென்ட் பொறுக்கி என்றும் கூறினார். இதனால் கோபமடைந்த விஷ்ணு ஒரு கட்டத்தில் தன்னுடைய செருப்பை கழட்ட முயன்றார். பின்னர் அதை அப்படியே சமாளித்து மீண்டும் தினேஷிடம் சண்டை விட்டார்.

Advertisement