ரஷிதாவை எதிர்பார்த்த தினேஷ், ஏமாற்றத்தை கொடுத்த ரஷிதா. கடைசியில் உள்ளே பெற்றோர்கள்.

0
328
- Advertisement -

தமிழில் விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 78 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ. ஜோவிகா, அன்னயா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-
Rachitha

மேலும், கடந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் பிக் பாஸ், இரண்டு நபரை தேர்ந்தெடுத்து அவர்கள் போட்டியில் கலந்து கொள்ள கூடாது என்று சொன்னவுடன் எல்லாருமே அர்ச்சனா, விஜய் வர்மாவை தேர்ந்தெடுத்து இருந்தனர். பின் நிகழ்ச்சியில் டான்ஸ் மாரத்தான் டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. இதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுடைய கதாபாத்திரமாகவே மாறி நடனமாடி இருந்தனர்.

- Advertisement -

பிக் பாஸ் 7:

குறிப்பாக விசித்ரா, தினேஷ், அர்ச்சனா ஆகியோர் தங்களுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தார்கள். பின் கடந்த வார நாமினேஷனில் நிக்சன் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்ட்டது. ஆனால், கடந்த சில வாரங்களாகவே கூல் சுரேஷ் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறிக்கொண்டே இருந்தார். அதோடு கூல் சுரேஷ் சுவர் ஏறி குதித்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி இருந்ததது. இதனால் கடந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து கூல் சுரேஷ் வெளியேறி இருக்கிறார்.

ப்ரீஸ் டாஸ்க்:

பின் இந்த வாரம் கேப்டன் யாரும் இல்லை. அனைவருமே என்று பிக் பாஸ் சொன்னார். இதனால் போட்டியாளர்கள் குஷி ஆகி விட்டார்கள். அதன் பின் நாமினேஷன் நடைபெற்று இருக்கிறது. அதில் விசித்ரா, ரவீனா, விக்ரம் ஆகியோர் பெயர் இடம் பிடித்து இருக்கிறார்கள். இதில் கண்டிப்பாக இந்த வாரம் விக்ரம் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வந்த வாக்குகளின் அடிப்படையில் விக்ரம் தான் குறைந்த வாக்குகள் பெற்றிருக்கிறார்.

-விளம்பரம்-

தினேஷ் பெற்றோர்கள்:

மேலும், அனைவரும் எதிர்பார்த்த ப்ரீஸ் டாஸ்க் இன்று நடைபெற இருக்கிறது. இதில் போட்டியாளர்களின் ஒவ்வொரு உறவினர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வரப்போகிறார்கள். இதனால் இன்று பிக் பாஸ் வீடே எமோஷனல் ஆகி இருக்கிறது. அந்த வகையில் ரசிகர்கள் பலரும் எதிர்பார்ப்பது தினேஷின் குடும்பத்தை தான். தினேஷை பார்க்க அவருடைய அப்பா, அம்மா இருவரும் பிக் பாஸ் வீட்டிற்கு வருகிறார்கள்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு:

மேலும், இவர்கள் ரக்ஷிதாவை பற்றி ஏதாவது பேசுவார்களா? என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் தினேஷை பார்க்க ரசிதா வருவாரா? என்றும் ரசிகர்கள் ஒரு பக்கம் எதிர்பார்த்தார்கள். ஆனால், ரக்ஷிதா தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. ரக்ஷிதா வரமாட்டார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

Advertisement